|
சீனாவில், ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளை அடிப்பதற்காக கம்பு ஒன்று வைத்திருப்பது வழக்கம். பெற்றோர் பிள்ளையை அடிக்கும் கூட ‘ஏன் அடித்தீர்கள்?’ என்று குழந்தைகள் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது. ஒரு சமயம் தொண்ணுõறு வயது தகப்பனார், தன் எழுபது வயது மகன் மீது கோபம் கொண்டார். கம்பை எடுத்து, முதுகில் நாலு சாத்து சாத்தினார். எப்போதுமே வாய் திறக்காத மகன், அன்று என்னவோ அழத் தொடங்கி விட்டார்.வயதான அப்பாவுக்கு மனம் கேட்க வில்லை. ‘என்றுமே அழாத பிள்ளை இன்று அழுகிறானே! அடி பலமாகப் பட்டு விட்டதோ,” என்று எண்ணி மகனை அணைத்துக் கொண்டார்.“ஏனப்பா அழுகிறாய்?” என்று கேட்டார் அப்பா.அதற்கு மகன்,“எப்போதும் அடி பலமாக விழும். ஆனால், இன்று என்னவோ வலிக்கவே இல்லை. உங்களின் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்பதை எண்ணி அழுகிறேன்,” என்றார். குழந்தைகள் பெரியவர்களானாலும் கூட பிள்ளைகளைக் கண்டிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு. பெற்றோர்கண்டித்தாலும், குழந்தைகள் அவர்களை வெறுக்கக்கூடாது என்பதை உணர்த்தவே இந்த கதை அங்கு வழங்கப்படுகிறது.
|
|
|
|