|
உங்களுக்கு மிகவும் பிடித்த கோட்பாடு என்ன? என்று ஒருவர் தன்நண்பரைக் கேட்டார். ஒரு நிமிடம் கூட யோசிக்காத அவர்ஆணித்தரமாக, உனக்கு எது சொந்தம் இல்லையோ, அதன் மேல் நீ எந்தவிதமான சொந்தமும் கொண்டாடக் கூடாது, என்றுபதிலளித்தார்.அவருடைய பதில் கேள்வி கேட்டவரைமிகவும் சிந்திக்க வைத்தது. மற்றொரு நண்பரைச் சந்தித்து, அவரிடம் முதல் நண்பருடைய பதிலைக்கூறியவுடன், என்னுடைய ஜைன மதக் குரு எனக்கு உபதேசித்த ஒரு சிறியகதையைக் கேளுங்கள் என்று கூறி, என் ஆவலை கிளப்பி விட்டு, சொல்ல ஆரம்பித்தார்: ஒரு பணக்கார வணிகர் பஸ்சில் சென்று கொண்டுஇருந்தார். அவர் காலின் கீழ் தோலால் செய்யப்பட்ட ஒரு பணப்பை கிடந்தது. சிறிது இந்தப்பக்கம், அந்தப்பக்கம் பார்த்து விட்டு, மெள்ள அதை எடுத்து, தன்னுடைய ஆடையில் மறைத்துக் கொண்டார். வீட்டிற்கு சென்று பார்த்தால், சிலஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.
அத்துடன்,அந்த பணப்பையின் சொந்தக்காரரின் பெயரும், விலாசமும் இருந்தன. இந்தப் பணம் தனக்கு சொந்தமில்லையே, பணப்பையை கொண்டு போய் கொடுத்து விடுவோம் என்று ஒரு எண்ணம் தோன்றினாலும், ஆசை அவரை விடவில்லை. அவரே பணத்தை வைத்துக் கொண்டார்.சில நாட்கள் கடந்தன. பணப்பை பற்றி வணிகர் மறந்தே போய் விட்டார். அவருடைய நுõறு ரூபாய் நோட்டு ஒன்று ஒரு நாள் காணாமல் போய் விட்டது. எங்கு தேடியும்கிடைக்கவில்லை. மிகவும்கவலையில் இருந்தார். அப்பொழுது, வீடு பெருக்கும் பெண்மணி, சாமி...உங்க கார் அடியில் இந்த நுõறு ரூபாய் கிடைத்தது. உங்க சட்டைப் பையிலிருந்து கீழே விழுந்திருக்கும் போல இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள், என்று கூறி பணத்தை வணிகரிடம் கொடுத்தாள். உடனே வணிகருக்கு பஸ் பயணம் நினைவிற்கு வந்தது. எவரோ அவர் தலையில் நன்கு அடிப்பது போல அவருக்கு தோன்றியது. ஒரு ஏழைப் பெண்மணியிடம் இருக்கும் நேர்மை என்னிடம் இல்லாமல் போய் விட்டதே? அன்று நான்இன்னொருவருடைய பொருளை, தெரிந்தே திருடி விட்டேனே? மனிதத்தனமே இல்லாமல் நடந்து கொண்டு விட்டேனே என்று உணர்ந்து, உடனே அந்த அந்த சொந்தக்காரரின் விலாசத்துக்கு சென்று அவருடைய பணத்தை சமர்ப்பித்தார்.பணம் பெற்றுக்கொண்டவர் நன்றி கூறினார். வணிகர் நடந்ததை முழுக்க விவரித்து விட்டு, நீங்கள் நன்றி கூற வேண்டியது என்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்குத்தான். எனக்கு இல்லை. நான் உண்மையில் குற்றவாளி. இப்பொழுது என்னுடைய குற்றத்திற்கு பிராயச்சித்தம் செய்வதற்கு ஆண்டவனே ஒரு வழி காட்டிஇருக்கிறான். என்னுடைய மனமாற்றத்திற்கு காரணமே அந்த பெண்மணிதான் என்றார். தான் செய்த தவறை உணர்ந்து அதற்கு வேண்டிய பரிகாரத்தை செய்ததால்,வணிகருடைய நெஞ்சில் அமைதி நிரம்பியது என்று கதையை முடித்தார்.எல்லா மதங்களுமே நேர்மையாக, உண்மையாக நடக்க வேண்டும் என்றுதான் நமக்கு சொல்லுகின்றன.நாம் தான் கடைபிடிக்க தயங்குகிறோம். |
|
|
|