Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நண்பேன்டா...!
 
பக்தி கதைகள்
நண்பேன்டா...!

துவாரகையைச் சேர்ந்தசத்ராஜித்துக்கு நண்பனாக விளங்கியவர் சூரியன்.இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். ஒருநாள், காலைப்பொழுதில்கடற்கரையில் உதித்து எழுந்த நண்பனான சூரியதேவனை சத்ராஜித் வணங்கினான். தகதக வென ஜொலித்துக் கொண்டிருந்த சூரியனின்பிரகாசத்தை சத்ராஜித்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சூர்யா! எப்போதும் உன்னை நெருப்புக் கோளமாகவே பார்க்கிறேன். கண்கள்கூசுகின்றன. என் நண்பனாக உன்னைக் காண முடியாதா? என்று கேட்டான்.சூரியதேவன் சிரித்துக் கொண்டே, தன் கழுத்தில் இருந்த சியமந்தகம் என்னும் ரத்தினத்தை மறைத்து விட்டு, அவன் முன் காட்சியளித்தார். என்ன ஆச்சரியம்! இப்போது, அவன் கண்கள் கூசவில்லை.நண்பனே! நீ விரும்பியதை கொடுக்கவும் காத்திருக்கிறேன் என்று வரம் அளிக்கவும்தயாரானார் சூரியன்.சத்ராஜித்துக்கு சூரியனின் சியமந்தக மணியை தானும் அணிய வேண்டும் என்ற ஆவல் உண்டானது. சூரியனும் அதைக் கொடுத்து விட்டார். சத்ராஜித் அதை அணிந்தபடியே துவாரகைக்குத்திரும்பினான்.  அவனைக் கண்ட மக்கள், கிருஷ்ணரிடம் சென்று சூரிய பகவான், துவாரகைக்கு வந்திருப்பதாக தெரிவித்தனர்.கிருஷ்ணர் தன் ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்தார். மக்களே! வந்துஇருப்பது சூரியதேவன் அல்ல! நம் சத்ராஜித் தான், சூரியனின் மாலையை அணிந்திருக்கிறான். அவன் அணிந்திருக்கும்சியாமந்தக மணியால், அவன் பிரகாசமுள்ளவனாகி விட்டான் என்ற உண்மையைதெரிவித்தார்.நண்பனுக்காக தன் பிரகாசத்தையே விட்டுக் கொடுத்த பிறகும், சூரியன் இன்னும் இவ்வளவுபிரகாசிக்கிறான் என்றால், அந்தக்கால சூரியன் எப்படி இருந்திருக்குமென கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை! சரிதானே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar