|
உழவுத் தொழிலின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவது மட்டுமல்ல! பொங்கல் பண்டிகையை ஒரு பாசமலர் திருவிழா என்றும் சொல்லலாம்.கண்கண்ட தெய்வமானசூரியனுக்கு நன்றி சொல்வதே பொங்கலின் அடிப்படைக் கோட்பாடு. பொங்கலன்று காலையில் நீராடி, புது பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சிஇலையைக் கட்ட வேண்டும். பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய, சந்திரவடிவங்களை வரைய வேண்டும்.பொங்கல் பொங்கி வழியும் போது, பொங்கலோ பொங்கல்! என்று குரலெடுத்து கூவுவார்கள். பானை எத்திசையில் பொங்கி வழிந்தாலும் அது நன்மையே தரும். பொங்கலை இறக்கியதும், நைவேத்தியப் பொருட்களை வைத்து சூரிய பூஜைக்கு தயாராக வேண்டும்.திறந்த வெளியிலேயே பூஜை செய்ய வேண்டும். அங்கு அரிசி மாவால்கோலமிட்டு, கோலத்துக்கு வடக்கே சூரியனையும், தெற்கே சந்திரனையும் வரைய வேண்டும். ஒரு தலைவாழை இலையில் பொங்கல், காய்கறிகள், பழம், கரும்பு, தேங்காய், வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும்.சூரியனை நோக்கி பூஜை செய்ய வேண்டும். பொங்கலை காகத்திற்கு படைக்க வேண்டும். பிறகே, சாப்பிட எடுக்க வேண்டும். பொங்கல் செய்த பானையை, பொங்கலன்றே காலி செய்து விடக்கூடாது.பொங்கலுக்கு மறுநாள் காலையில் செய்யப்படும் ஒரு விசேஷ நிகழ்ச்சி கணுப்பிடி. இது பெண்களுக்கு உரியது.
கணுப்பிடி வைக்கும் காலை நேரத்தில் ராகு காலம்,எமகண்டம் இருக்கக்கூடாது. கணுப்பிடி வைக்கும் இடத்தில் கோலமிட்டு, செம்மண் பூசி அழகு செய்ய வேண்டும். முதல்நாள் பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் தோய்த்து கணு வைக்கும் பெண்கள் தங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.இரண்டு வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ, மொட்டை மாடியிலோ கணுப்பிடி வைக்கலாம். முதல் நாள் மீதமிருக்கும் பொங்கல் சாதத்தில் சிறிது எடுத்துதனியாகவும், சிறிது சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து மஞ்சள், சிவப்பு சாதம்என்றும் வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப் படை எண்ணிக்கையில் வரும்படியாக இலைகளில் மூன்று வரிசைகளாக உருட்டி வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கரும்பு துண்டுகள், மஞ்சள் அட்சதை, பூக்கள் ஆகியவற்றை ஒருதட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தி கரைசலும் வைத்துக் கொள்ள வேண்டும். அட்சதையையும், பூக்களையும் கணுப்பிடியாக வைத்த சாத வகைகளில் துõவி, கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். கல்யாணமாம் கல்யாணம், காக்கைக்கு எல்லாம் கல்யாணம், என்று சொல்ல வேண்டும். பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்தஇலைகளையும் சூரியபகவானையும் வணங்கி ஆரத்தி எடுக்க வேண்டும். சாதவகைகளை காகத்திற்கு வைக்க வேண்டும்.கணுப்பிடி அன்று வீட்டில் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, தயிர்ச்சாதம், அவியல், பாயாசம், தேங்காய் துவையல், அப்பளம் முதலானவை சமைத்து சாப்பிட வேண்டும்.இந்த நோன்பு சகோதரர் நன்மைக்காக செய்வதாகும். அன்று பிறந்த வீட்டுச் சீராக பெண்களுக்குப் பணமோ, துணியோ வழங்க வேண்டும். இந்த கணுப்பிடி நிகழ்ச்சியைபாசமலர் திருவிழா என்று சொல்லலாம். |
|
|
|