|
பழைய விஷயங்களை அசை போடுவதில் அலாதி இன்பம் எல்லாருக்குமே இருக்கும். பள்ளி, கல்லுõரி, இளைய பருவங்களில் நடந்ததை எல்லாம் மீண்டும் நினைவுபடுத்தி அந்த வசந்த காலம் மீண்டும் வராதா எனஏங்குவோம். அதுபோல், நம் மகான்கள் நமக்களித்த பழைய விஷயங்களை அசை போட்டால் வாழ்க்கையே மகிழ்ச்சிக்கடலாய் மாறும். தொடர்வோமா!நான் எவ்வளவோ காரியங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நேரமே கிடைப்பதில்லை என்று புகார் செய்யும் மனிதர்கள் நம்மிடையே மிக அதிகம். ஒரு நாளில் 24 மணி நேரம் தான் இருக்கிறது. 48 மணி நேரம் இருந்தால், நான் சாதனைகள் புரிவேன் என்று கூறுபவர்களும் உண்டு.24 மணி நேரத்தை விரிவுபடுத்த முடியுமா என்று ஒருவரிடம் கேட்டேன்.அதற்கு அவர், முடியுமே! காலையில் 7 மணிக்கு பதிலாக 6 மணிக்கே எழுந்து விடுங்கள், நமக்கு சுளையாக ஒரு மணி நேரம் அதிகம் கிடைக்கிறதே, என்றார். மற்றொருவர் நேற்று செய்த செயல்களை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்; தேவை இல்லாமல் செய்தவற்றை இன்று நீக்கி விடுங்கள்; கையில் அதிக நேரம் இருக்கும். உதாரணத்திற்கு, இமெயில் தபால்களைஉடனுக்குடன் படிக்கிறோம், பதில் எழுத முயற்சிக்கிறோம். அவ்வாறு செய்யாமல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பார்க்கலாம், தேவை இல்லாமல் செலவிடும் நேரத்தைதவிர்க்கலாமே! என்றுஆலோசனை தருகிறார்.இதே போல் தான் பணவிஷயமும்!வரவிற்கும், செலவிற்குமே சரியாகப் போய் விடுகிறது. கையில் பணம் நிற்க மாட்டேன் என்கிறதே; என்ன செய்வது? என்று அங்கலாய்க்கும்மனிதர்கள் பற்றி நண்பர்ஒருவரிடம் கேட்டேன்.நம் கையில் இருக்கும் நேரத்தை விரிவுபடுத்துவது போல, இங்கே கையில் பணத்தை நிற்க வைக்க, ஒன்றிரண்டு செலவைக் குறைக்கலாம்; அல்லதுவருமானத்தை அதிகரிக்க வாய்ப்புக்களை தேடிச்செல்லலாம் என்று பதில் தந்தவர் தனக்குத்தானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டார்.இதுபற்றி அந்தக்காலத்திலேயே ஒரு ஸ்லோகம் சொல்லி யிருக்கிறார்கள். ஷட் தோஷா: புருஷேண இஹ ஹாதவ்யா பூதிம் இச்சதாநித்ரா, தந்த்ரா, பயம், க்ரோத:, ஆலஸ்யம், தீர்க-சூத்ரதா என்பது அந்த ஸ்லோகம். முயற்சிகள் தான் நம்மைவெற்றியின் அருகில் அழைத்துச் செல்லும் என்பது முதல் வரிக்குஉரிய விளக்கம். இந்த ஸ்லோகத்தில் தவிர்க்க வேண்டிய ஆறு குறைபாடுகள் குறித்துசொல்லியிருக்கிறார்கள்.
|
|
|
|