|
மதுரா நகர் மன்னரிடம் திரிபுரர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவருக்கு பதவியில் நாட்டம் குறைந்து, கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்தது. மன்னரிடம் விடை பெற்று பிருந்தாவனம் புறப்பட்டார். செல்வத்தை எல்லாம் ஏழைகளுக்கு தானம் அளித்தார். கிருஷ்ண நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டுஎளிமையாக வாழ்ந்தார். ஒருநாள் மதுரா கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றார். பக்தர்கள் அளித்த வண்ணப்பட்டாடைகளால் மூலவர் அலங்காரமாக காட்சியளித்தார். தானும் அதைப் போல, கிருஷ்ணருக்கு புத்தாடைஅணிவிக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு மேலிட்டது. தன்னிடம் இருந்த பாத்திரத்தை விற்றுக் கிடைத்த பணத்தில் நுõலாடை வாங்கினார். அர்ச்சகரிடம் கொடுத்துஇறைவனுக்கு அணிவிக்க வேண்டினார். அதைக் கையில் வாங்கிய அர்ச்சகர் ஏளனத்துடன், ‘இந்த எளிய ஆடையை எப்படி அணிவிப்பது?’ என்று கேட்டுக் கொண்டே, தரையில் போட்டு அதில் அமர்ந்து கொண்டார்.திரிபுரரின் மனம் வருந்தியது.அந்த சமயத்தில் மூலவரின் திருமேனி அசைவதுபோலிருந்தது. குளிரால் கிருஷ்ணர் நடுங்குவதைஅர்ச்சகரால் உணர முடிந்தது. என்ன செய்வதென தெரியாமல் நின்ற அர்ச்சகரிடம் திரிபுரர், மீண்டும் நுõலாடை அணிவிக்கும்படி வேண்டினார். அதன்படியே பட்டாடையைக் களைந்து நுõலாடையை அணிவிக்க, கிருஷ்ணரின் நடுக்கம் நின்றது. தன் தவறை உணர்ந்த அர்ச்சகர் திரிபுரரிடம் மன்னிப்பு கோரினார். காணிக்கை எது என்பது முக்கியமல்ல! பக்தனின் அன்பையே கடவுள் ஏற்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் உ<தாரணம்.
|
|
|
|