|
சீனாவில் போர்மோசா தீவிலுள்ள மலை மீது மனிதர்களைக் பலியிடும் பழங்குடியினர் இருந்தனர். அவர்கள் அடிக்கடி மலையை விட்டுக் கீழிறங்கி, கண்ணில் படும் சீனர்களைப் பிடித்துச் சென்று கடவுளுக்கு பலியிட்டு வந்தனர். காஹாங்க் என்னும் நல்லவர் இதற்கு முடிவு கட்ட விரும்பினார். அனைவரிடமும் அன்பு காட்டும் அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.நரபலியை நிறுத்தும்படிகேட்பதற்காக, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிக்குப் புறப்பட்டார். ஏனெனில் அந்த மக்களுக்கும் காஹாங்க்பரிச்சயமானவர்.அந்நியரைக் கண்டால் கொலைவெறியுடன் ஓடிவரும் பழங்குடியினர் காஹாங்கைக் கண்டு கோபம் கொள்ளவில்லை. காஹாங்க் அவர்கள் வசிக்கும் மலையிலேயே தங்கி விட்டார். பழங்குடியினர் பேசும் பாஷையைக் கற்றுக் கொண்டு, அவர்களின் இனத் தலைவனுக்கு நரபலியின் கொடுமையை எடுத்துரைத்து வந்தார்.இப்படியே ஓராண்டு காலம் சென்று விட்டது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கோயில் விழா நெருங்கியது. மக்களைத் திருப்திப்படுத்த, பலரைப் பலியிட வேண்டாம் என்றாலும் ஒரே ஒரு நபரை மட்டுமாவது பலியிட அனுமதிக்கும்படி பழங்குடி இனத்தலைவன் வேண்டினான். “சரி! என்ற காஹாங்க்,“ நாளை அதிகாலையில் சிவப்புக் குல்லாவுடன் ஒருவர் இப்பகுதிக்கு வருவார். அவரின் தலையை வெட்டுங்கள்,” என்று சொல்லி புறப்பட்டார்.மறுநாள் அதிகாலையில் சிவப்பு குல்லாவுடன் ஒருவர் அங்கு வரவே, பழங்குடி மக்களும் கொன்றுகடவுளுக்குப் பலியிட்டனர். அதன் பின், அங்கு வந்த தலைவனுக்கு, கொல்லப்பட்டவர் காஹாங்க் என்ற உண்மை தெரிய வந்தது. மிகுந்த வருத்தத்துடன் கடவுளுக்கு இனி நரபலி கொடுப்பதில்லை என்ற முடிவை அவன் அறிவித்தான்.‘ஆயிரம் ஆண்டுகள்கழிந்தாலும் உங்கள் நினைவு எங்கள் நெஞ்சை விட்டு நீங்காது,” என்ற கல்வெட்டை அங்கு வைத்தான். காஹாங்கின் பெருமையை இன்றும் அவர்கள் பேசிக் கொண்டே இருக்கின்றனர். |
|
|
|