Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பசி தீர்த்த கல்!
 
பக்தி கதைகள்
பசி தீர்த்த கல்!

குஜராத்தை ஆட்சி செய்த மன்னரின் மகள் சினாபாய். சிறு வயதிலேயே புத்திசாலியாக இருந்த மகளை, மன்னர் கல்வி பயில அனுப்பினார். விஷ்ணு பக்தரான குருநாதர், அவளுக்கு கல்வியோடு பக்தியையும் ஊட்டினார். தினமும் விஷ்ணுவை பூஜித்த பின்னரே, சாப்பிடும் வழக்கத்தை குருநாதர் கொண்டிருந்தார்.சினாபாயும் அவரைப் போலவே செய்தாள். கல்வியை முடித்து, அரண்மனை திரும்பிய சினாபாயிடம், குருநாதர் ஒரு சாளக்கிராம கல்லை அளித்தார். “சினாபாய்! நீ தினமும்காலையில் நீராடியதும்சாளக்கிராம பூஜை முடித்த பின்னரே சாப்பிட வேண்டும். இப்படி செய்தால், விஷ்ணுவின் அருள் உனக்கு எப்போதும் கிடைக்கும்” என வாழ்த்தி அனுப்பினார். சினாபாயும் குருநாதரின்கட்டளையை ஏற்று நடந்தாள்.திருமண வயதை அடைந்தாள் சினாபாய். அண்டை தேசத்து மன்னனின் மகனே மணமகனாக வாய்த்தார். திருமணம் முடிந்த மறுநாள், கணவர் வீட்டிலும் பூஜை செய்ய ஆயத்தமானாள் சினாபாய். பக்தியே இல்லாத கணவனோ, சாளக்கிராமம் இருந்த பெட்டியை ஆற்றில் வீசி விட்டான். பூஜை செய்யாமல் உணவு உண்பதில்லை என்னும் விரதத்தால், சினாபாய் சாப்பிட மறுத்து விட்டாள். பல நாட்கள் உணவின்றி உடல் தளர்ந்தது. அவளின் மன உறுதியைக் கண்ட விஷ்ணு துறவி வடிவில் வந்து, சாளக்கிராமக் கல்லை வழங்கி அருள்புரிந்தார். சினாபாயும் பூஜித்த பிறகே சாப்பிட்டு பசி தீர்ந்தாள்.கணவனும் மனம் திருந்தினான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar