|
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான், பார்வதி தேவியுடன் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புத திருநாள் தைப்பூசம். அன்று வியாழக்கிழமை, மதியவேளை. ஆயிரம் முகங்கள் கொண்ட பானுகம்பர் ஆயிரம் சங்குகளை ஊதினார். ஆயிரம் தோள்கள் கொண்ட வாணாசுரன் குடமுழவு என்னும் வாத்தியத்தை இசைத்தான். ஐந்து வகையான துந்துபி வாத்தியங்கள் ஒலிக்க, கந்தர்வர்கள் கீதம் இசைக்க வேதஒலி எங்கும் முழங்கியது. வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேர் என அனைவரும் சிவனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்தனர். உள்ளம் உருக, மெய் சிலிர்க்க எல்லோரும் ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். அப்போது, சிவனே! உமையவளுடன் ஆடும் இந்த ஆனந்த தாண்டவத்தை எப்போதும் தரிசிப்பதற்கு அருள்புரிய வேண்டும், என பதஞ்சலி முனிவர் வேண்டினார். சிவனும் உடன்பட்டார். பொன்னாலான சபை உருவாக்கப்பட்டது. அன்று முதல், அவர் கனகசபையான சிதம்பரத்தில், அம்பிகையுடன் நடனக்காட்சி தந்தருளிக் கொண்டிருக்கிறார்.பூச நட்சத்திர தேவதையான தேவ குருவான வியாழபகவான் ஞானத்தின் வடிவமானவர்.
பூச நட்சத்திரத்தில் செய்யும் வழிபாட்டால் தேவ குருவின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுõரில் தைப்பூசத்தன்று, சித்த தீர்த்தத்தில் நீராடி வில்வமரத்தை வலம் வந்து மருதீசரைத் தரிசிக்க பாவம் நீங்கும். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகிலுள்ள திருப்புடைமருதுõரில் தாமிரபரணியில் நீராடி ஈசனைத் தரிசிப்பது சிறப்பு.தைப்பூசத்தை ஒட்டி முருகன்கோயிலுக்குப் பாதயாத்திரை செல்வர். பூசத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு? சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் வருந்தினர். முருகன் சிவன் நெற்றியில் இருந்து அவதரித்தார். அவரின் தலைமையில் தேவர்கள் திருச்செந்துõரில் தங்கியிருந்த நேரம் அது. ஒரு தைப்பூச நாளில் தான், தேவகுருவான வியாழ பகவான் தன் சீடர்களான தேவர்கள் படும் துயரை முருகனிடம் எடுத்துரைத்தார். அவரும் சூரசம்ஹாரம் செய்து காத்தருளினார். உத்ராயண புண்ணிய காலமான தைப்பூச நாளில் முருகனிடம் கோரிக்கை வைத்தால் விரைவில் நிறைவேறும். உண்மை ஆன்மிகவாதிகள் எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுவார்கள். யார் மீதும் பேதம் காட்ட மாட்டார்கள். அனைவரின் ஒற்றுமைக்காகவும் படாத பாடும் படுவார்கள். இதற்கென்றே அவதரித்தவர் ராமலிங்க சுவாமி என்னும் வள்ளலார். உத்தர ஞான சிதம்பரம் என்னும் வடலுõரில், ஞானசபையைக் கட்டினார். இங்கு 1872, ஜன.25ல் நடந்த தைப்பூச நாளில் முதன் முதலாக வழிபாடு தொடங்கியது. வள்ளலாரால் காட்டப்பட்ட அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தை எல்லோரும் கண்டு களித்தனர். இன்றும் தைப்பூசஜோதி தரிசனம் வடலுõரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. |
|
|
|