|
தர்மநெறியில் வாழ்ந்து காட்ட திருமால் எடுத்ததே ராமாவதாரம். மனிதனாகப் பிறந்தவன் பெற்றோர், குரு, மனைவி என தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார். இதை சாமான்ய தர்மம் என்பார்கள். ஆனால், இந்த தர்மத்தை விட சிறந்தது சேஷ தர்மம். அப்படி வாழ்ந்து காட்டியவர் லட்சுமணர். சாமான்ய நிலையைக் கடந்து கடவுளின் திருவடியை மட்டுமே பற்றிக் கொண்டு வாழ்வதே சேஷ தர்மம். உலகில் ராமரைத் தவிர வேறொன்றும் அறியாமல் வாழ்ந்தவர் லட்சுமணர். காட்டுக்குப் புறப்பட்ட அண்ணன் ராமன் நினைவிலேயே வாழ்ந்தவர் பரதர். எங்கோ அயோத்தியில் இருந்து கொண்டு ராமனுக்காக சேவை செய்தவர். அதற்கு விசேஷ தர்மம் என்று பெயர். இதையும் விட சிறப்பானது அடியாருக்கு சேவை செய்யும் விசேஷ தர தர்மம். ராமனின் அடியவரான பரதனுக்கு சேவை செய்தவர் சத்ருக்கனர். இப்படி, ராமர் மட்டுமில்லாமல் அவரின் மூன்று தம்பியரும் தர்மநெறி தவறாது வாழ்ந்து காட்டினர். |
|
|
|