|
உலகத்தின் கூரை என போற்றப்படும் திபெத்தில் கைலாயம் உள்ளது.வெள்ளிமலை மன்னவனானசிவபெருமானின் இருப்பிடமானஇம்மலைக்கு நொடித்தான் மலை,கயிலாயபுரி, கைலாயம், கைலாஷ்,திருக்கயிலை என்று பெயர்கள் உண்டு. சிவன் மலை வடிவிலும், அதை ஒட்டியுள்ள மானசரோவர் ஏரி அம்பாளாகவும்திகழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்து மதத்தினர் மட்டுமின்றி, புத்த, சமண, பொம்பா மதத்தினரும் இந்தமலையைப் புனிதமானதாகக் கருதுகின்றனர். ஆனால், இதில் ஒரு விசேஷம்என்னவென்றால், மலை தான் வடக்கே இருக்கிறதே ஒழிய, கைலாசநாதரைப் பற்றி வடமொழியில் ஸ்தோத்திரங்கள் குறைவாகவே உள்ளன. அதேசமயம்,தமிழில் இந்த மலை பற்றி அதிக பாடல்கள் உள்ளன. வடமொழி புராணங்கள் அனைத்தும்சூத முனிவர் என்பவரால், நைமிசாரண்யம் என்ற காட்டில் வசிக்கும் முனிவர்களுக்கு சொல்லப்பட்டதாக இருக்கும். ஆனால், கைலாய மலையின் வரலாற்றை உபமன்யு முனிவர் சிவ கணங்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது. பெரியபுராணத்தில் இப்படி ஒரு தகவல்இருப்பதாக ராமகிருஷ்ணமடம் சுவாமி மலாத்மானந்தர் சொல்கிறார். சேரமான் பெருமாள் நாயனார்கைலாயத்தில் சிவன் முன்னிலையில் அரங்கேற்றிய நுõல் ‘திருக்கைலாயஞானஉலா’. திருநாவுக்கரசர் தேவாரத்தில்‘காவாய் கனகத்திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி’ என்று பாடியுள்ளார். பார்த்தீர்களா! கைலாய மலை வடக்கே இருந்தாலும், ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. |
|
|
|