|
பணக்காரர் ஒருவர் ஞானியை சந்தித்து, என்னிடம் எவ்வளவோ வசதிவாய்ப்புகள் இருந்தும், சந்தோஷம் இல்லை என்றார்! ஞானி, தனது உள்ளங்கையை இறுக மூடியபடி, இது என்ன? என்றார். தெரியவில்லை! கையைத் திறந்து பார்! பணக்காரர் முயன்றார். ஆனால் ஞானியின் கையைத் திறக்க முடியவில்லை. இதிலிருந்து நீ என்ன தெரிந்து கொண்டாய்? எனக் கேட்டார் ஞானி. கைகள் மூடியிருப்பதால், செயலற்றவை ஆகிவிட்டன! என்றார் பணக்காரர். ஞானி புன்னகைத்தவாறே கூறினார், ஆம்! அதுபோலத் தான் உன்னிடம் நிறைய செல்வம் இருந்தும், அது செயலற்றதாக இருக்கிறது. சிக்கனமாக இருப்பது நல்லதுதான். ஆனால் நீ சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில், ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் செய்ய வேண்டும்! என்றார். |
|
|
|