Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வேங்கடரமணர் பாகவதர்
 
பக்தி கதைகள்
வேங்கடரமணர் பாகவதர்

தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டையில் சவுராஷ்டிர விப்ர குலத்தைச் சேர்ந்தவர் நன்னுசாமி பாகவதர். ஒருமுறை அவர் குடும்பத்தோடு திருமலை சென்று ஏழுமலையானைத் தரிசித்தார். வேங்கடநாதா! உன் மீது பக்தியுள்ள ஒரு மகன் எனக்குப் பிறக்க வேண்டும். என்று வேண்டிக்கொண்டார்! பிரார்த்தனையின்படி, 1781, பிப்ரவரி 18-இல் வேங்கடரமணன் பிறந்தான். பக்தியும் இசையும் அவனுக்கு இரண்டு கண்கள். தமிழ், சவுராஷ்டிரம், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கசடறக் கற்றான். திருவையாறு சத்குரு ஸ்ரீதியாக பிரும்மம், வேங்கடரமணனைத் தம் சீடனாக்கிக் கொண்டார். தியாகய்யர் அவருக்கு ஸ்ரீராம மந்திரத்தை உபதேசித்தார். வேங்கடரமணா, நீ எப்படி மெய் மறந்து ராமனைப் பாடுகிறாயோ, அதே போன்று உன் உடல் துன்பங்களை நினைக்காமல் அடியேனுக்காக இவ்வளவு பணிவிடைகளைச் செய்கிறாயே! என்று குரு கேட்க உடனே வேங்கடரமணன் தங்கள் அருள் இருந்தால் எதுதான் பளுவாகத் தெரியும், ஐயனே? என்று கூறினான். வேங்கடரமணன் தேடித் தேடிக் கொண்டு வரும் புஷ்பங்களைக் கொண்டு தியாகராஜர் தினமும் பூஜை செய்வார். ஆனால் அன்று...

வேங்கடரமணன் மன்னிக்க வேண்டும் குருவே! இன்று துளசி தளங்கள் மட்டுமே கிடைத்தன என்றான். குருநாதரும் வேங்கடரமணன் கொண்டுவந்த புஷ்பங்களை வாங்கி! சீடனே, பூஜை முடிந்திருந்தாலும் உன் பக்தியை மெச்சி துளசி தளங்களால் ராமரை அர்ச்சிக்கிறேன் என்றார். அப்போது தான்  ஓர் அற்புத அதிசயம் நடந்தது. துளசிதள முலசே ஸந்தோஷமுகா பூஜிந்து... ஸ்ரீராமா, வேங்கடரமணனின் துளசிதளங்களை ஏற்றருள்வாய் என்று வேண்டினார் குரு. என்ன ஆச்சரியம். துளசி தளங்கள் கீர்த்தனையில் கூறப்படும் மலர்களாகவே மாறுகின்றனவே! என்று குருநாதரும் சீடர்களும் ஆச்சரியம் அடைந்தனர். என்ன அதிசயம்! இது வேங்கடரமணனின் குருபக்தியா? நமது குருவின் ராம பக்தியா? என்று மனதுக்குள் நினைத்தார். தியாகய்யர் நௌகா சரித்திரம் (கிருஷ்ண லீலையை விளக்கும் நாடகநூல். பாகவதத்தில் இல்லாதது) எனும் நூலைத் தெலுங்கில் இயற்றி இருந்தார். தஞ்சை மகாராஜாவிடம் ஆஸ்தான புலவர்கள் அது சிருங்கார ரசமான கற்பனை நூல் என்று அதைத் தடுக்க விண்ணப்பித்தனர். மன்னர் தியாகய்யரைச் சபைக்கு வரவழைத்தார்.

தியாகய்யரே தங்களுடைய நௌகா சரித்திரம் அற்புதமாக உள்ளது. இதற்கு சமஸ்கிருதத்தில் மூல வடிவம் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார். வேங்கடரமணா, நௌகா சரித்திரத்திற்கு சமஸ்கிருத வடிவம் உண்டு என்று என்னை அறியாமல் கூறிவிட்டேன். இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.... நீ தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். உடனே வேங்கடரமணா கவலை வேண்டாம் சுவாமி, நான் உங்களது அந்த நூலைப் படித்து ஆர்வ மிகுதியால் வடமொழியில் எழுதி வைத்துள்ளேன். அதைத் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன். என்று கூறினான். இலக்கியப் பொக்கிஷமான அந்த நூலை மூன்று நாட்களில் வேங்கடரமணர் சமஸ்கிருதத்தில் எழுதினாராம். தியாகய்யர் இல்லத்தில் நடக்கும் ஏகாதசி பஜனையை வேங்கடரமணரே முன்னின்று நடத்துவார். என்று குருநாதர் கூறினார் அதுபோலவே வேங்கடரமணரும் ஒரு ஏகாதசியன்று தியாகய்யர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கடும் மழையில் ஐயம்பேட்டையிலிருந்து திருவையாற்றுக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டார் வேங்கடரமணர்.

அப்போது வேங்கடரமணர் குருநாதா, எப்படியாவது பூஜையில் நான் கலந்து கொள்ள எனக்கு அருள்புரியுங்கள். என்று வேண்டினார்.
வேங்கடரமணர் வரவில்லையென்று தியாகய்யர் கவலை கொண்டார். அப்போது ஒரு சிறுவன் அங்கு திடீரெனத் தோன்றி தியாகய்யரின் மனைவியிடம் வந்து.. அம்மா! வேங்கடரமணர் மழையில் சிக்கிக் கொண்டு விட்டார். அவர் வந்து மங்களம் பாடி பஜனையை முடிக்கலாம் என்று பெரியவரிடம் சொல்லுங்கள் தியாகய்யரின் மனைவியின் காதில் சொல்லிவிட்டு சென்றான். இவ்வாறு கூறிவிட்டு அந்தச் சிறுவன் மின்னலென மறைந்தான். தியாகய்யரின் மனைவி அவரிடம் சென்று சிறுவன் சொன்னதைச் சொன்னாள். சுவாமி, இந்தச் சிறுவன் யாரோ? ஆனால் என் நெஞ்சில் பேரானந்தத்தை நிரப்பிவிட்டுச் சென்றிருக்கிறான். மனது நிறைவாக இருக்கின்றது என்று கூறினாள். தியாகய்யர் தன் மனைவியிடம் கமலா, நீ கொடுத்து வைத்தவள். ஆஹா, என்ன ஒரு அற்புத நிகழ்வு நடந்துள்ளது. வந்தவன் வேறு யாருமல்ல, சாக்ஷாத் அந்த பாலகிருஷ்ணனே!

அந்தச் சமயத்தில் வேங்கடரமணர் வீட்டிற்குள் நுழைந்தார். தியாகய்யரும், அவர் மனைவியும் வரவேற்றனர். வாருங்கள், வேங்கடரமண பாகவதரே, நீரே இன்று பாலகிருஷ்ணனுக்கு மங்களம் பாட வேண்டும்! என்று கூறினார். இது பரந்தாமன் திருவுள்ளத்திலிருந்து எழுந்த நாமகரணம். நீர் நீடூழி வாழ்க. என்று வாழ்த்தினார். ஐயனே, காலதாமதத்திற்கு க்ஷமிக்க வேண்டும். என்னைத் தாங்கள் வழக்கம் போலவே அழைக்க வேண்டுகிறேன். என கூறினார் வேங்கடரமணர். வேங்கடரமணர் குருசேவைக்குக் குந்தகம் விளையும் என்ற அச்சத்தால் திருமணத்தைத் தவிர்த்து வந்தார். அவரது பெற்றோர்களின் வற்புறுத்தலால் தியாகய்யரே அவரை மணம் புரியப் பணித்தார். வேங்கடரமணரின் 41-வது வயதில் அவரது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு 26 வருடங்கள் தியாகய்யருக்குச் சேவை புரிந்தார். பிற்காலத்தில் வியாபார நிமித்தம் வேங்கடரமணர் வாலாஜாபேட்டையில் வாழ்ந்தார். முதல் மனைவி காலமானதால், இரண்டாவதாக  லெட்சுமிபாய் என்ற பெண்ணை மணந்தார். தன் இரண்டு மகன்கள்  மற்றும் சீடர்களுடன் பஜனை மடம் நிறுவி, ஸத்குரு, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமபிரான் ஆகியோர் மீது சவுராஷ்டிரம், ஸம்ஸ்க்ருதம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் கீர்த்தனைகள் இயற்றிப்பக்தியைப் பரப்பி வந்தார்.

சீடர்களே, இன்று என் குருநாதர் தியாகய்யர் மேல் அடியேன் இயற்றிய ஸ்ரீமத் தியாகராஜாஷ்டகத்தைச் சொல்லித் தருகிறேன். என்னுடன் சேர்ந்து பாடுங்கள் என்றார். தியாகய்யரின் மகள் சீதாலெட்சுமியின் திருமணத்திற்கு வேங்கடரமணர், தான் பூஜித்து வந்த ஸ்ரீகோதண்டராமரின் திருவுருவப் படத்தைத் தாமே எடுத்துக் கொண்டு திருவையாற்றுக்கு நடந்தே சென்றார். குருவே, இந்தத் திருவுருவப்படம் அடியேனின் சகோதரிக்கு அன்புப்பரிசு. இதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினான். தியாகய்யரோ! ஹே ராமா, நன்னு பாலிம்ப நடசிவச்சிவொ நா ப்ராண நாதா ( என் பிராண நாதா, ராமா, என்னைக் காக்க நடந்தே வந்தாயோ?) என்று கன்னீர் மல்கக் கூறினார். ஸ்ரீதியாகய்யரின் அந்திமக் காலம். வேங்கடரமணா! உன்னால் எழுதப்பட்ட எனது பல கீர்த்தனைகள் இந்தச் சுவடிகளில் உள்ளன. இவற்றுடன் அடியேன் வழிபட்ட ஸ்ரீராம விக்ரஹமும், இனி உன்னால் பூஜித்துப் பாதுகாக்கப்பட வேண்டும். செய்வாயா? என்று கேட்டார். வேங்கடரமணனும் தங்கள் சித்தம் என் பாக்கியம் குருவே என்றான். 26 ஆண்டுகள் குருவிற்குச் சேவை செய்த வேங்கடரமணன் குருவின் இறுதி கட்டளையை நிறைவேற்றினார். வேங்கடரமணர் இவ்வாறு சுமார் 50 வருடங்கள் பக்தியிலும் இசையிலும் தொண்டாற்றி வந்தார். 93 வருடங்கள் வாழ்ந்த அவர், 1874-இல் அந்திமக் காலத்தில் ஒரு நாள்...

வேங்கடரமணா பகவானிடம் ஸ்ரீராமா, எனக்குப் பின்னும் என் குருநாதர் வழிபட்ட விக்ரஹம், அவரது தம்பூரா, ஓலைச்சுவடிகள், மற்றும் அவரது பாதுகைகள் பக்தர்களால் பூஜித்துப் பாதுகாக்கப்பட அருள வேண்டும். என்று வேண்டிக்கொண்டார். மேற்கூறியவை அனைத்தும் வேங்கடரமணரின் சீடர்களால் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. அவர் பிறந்த ஐயம்பேட்டையில் ஆண்டுதோறும் மாசியில் மூல நட்சத்திர தினம் ஜயந்தி இசை விழா கொண்டாடப்படுகிறது. திருவையாற்றில் வேங்கடரமண பாகவதருக்குக் கோயில் எழுப்பப்பட்டு, தினசரி பூஜைகளும், ஜயந்தி விழாவும் நடத்தப்படுகின்றன. மதுரை, குடந்தை முதலான ஊர்களில் இசைவிழாவும் நடைபெற்று வருகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar