|
சதானீக ராஜன் சிறந்த தர்மவான். நித்தமும் அதிதிகளுக்கு அன்னதானமும். வஸ்திரதானமும் ஸ்வர்ண தானமும் அளிப்பான். சதானீகனின் காலம் முடிந்ததும் அவனது புதல்வன் அரியணை ஏறினான். நீதி நெறி தவறாமல் ஆட்சி செய்த அவன் தானம் செய்வதில் நம்பிக்கையற்று நிறுத்தி விட்டான். இதனால் அவதியுற்ற வேதியர். மன்னனிடம் தான புண்ணியம் பற்றி எடுத்துரைத்தனர். அரசன் என் தந்தை அளவற்ற தானம் செய்தவர். தற்போது எந்த லோகத்தில் எப்படி இருக்கிறார் என்று அறிந்து வந்து சொல்லுங்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டான். தேவர்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்காததால் சூரியன் பிராமண வடிவில் அந்தணர்கள் களையிழந்து காணப்படுவதற்கான காரணத்தை அறிந்து பார்க்கவ மகரிஷி தானம் எதையும் விரும்பாமல் நதிக்கரையில் காய் கனிகளை உண்டு அக்னிஹோத்திரம் செய்திறார். அவரிடம் சென்று அரசனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள் என்று கூறினார். அதன்படி அந்தணர்கள் பார்க்கவ முனிவரிடம் சென்று தங்கள் குறையைச் சொன்னார்கள்.
தன் தவ வலிமையால் சதானீகனைக் காண தேவலோகம் புறப்பட்டார் பார்க்கவர். வேதியர் வடிவில் சூரியனும் அவரோடு சேர்ந்து கொண்டான். பவுராணிகர். பார்க்கவரை வழிமறித்து, சென்ற பிறவியில் என் கதாகாலட்சேபத்துக்கு வந்து கதையைக் கேட்டுவிட்டு எனக்கு எதுவேம கொடுக்கவில்லை. இப்போது உங்கள் புண்ணியத்தில் பாதியை எனக்குக் கொடுத்தால்தான் மேலே செல்ல முடியும் என்றான். அவனிடம் ரிஷி வாதிட, சூரிய வேதியர் தலையிட்டு புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கை பவுராணிகருக்குப் பெற்று தந்தார். இதேபோல மொத்த புண்ணியத்தையும் இழந்த பார்க்கவரால் மேலே நடக்க இயலவில்லை. பார்க்கவர் சூரியனின் கரத்தை பற்றிக்கொள்ள இருவரும் யமலோகத்தை அடைந்தனர்.
அங்கே சதானீகன் கொதிக்கும் வெந்நீரில் துடிப்பதைக் கண்டு முனிவர் சதானீகா, உனக்கா இந்த நிலை? என்று வருந்தினார். மகரிஷே! குடிமக்களிடம் அநியாய வரி வாங்கியதற்கான தண்டனை இது. என் புதல்வன் யக்ஞமும், தானமும் செய்தால் இது தீரும் என்று கண்ணீர் விட்டான் அரசன். தேவ புருஷரே! தாங்கள் யார்? சதானீகனின் துன்பம் தீர வழி என்ன? என்று பணிவுடன் வினவினார் பார்க்கவர். சூரிய வேதியர் தன் சுயரூபத்தைக் காண்பித்து. சித்திரை மாத சதுர்த்தசியன்று தீப தானம் செய்தால் சதானீகன் விடுபடுவான் என்றருளி மறைந்தார். பார்க்கவர் பூலோகம் திரும்பி சதானீகனின் மகனிடம் தீப தான மகிமையை விளக்கினார். தந்தை படும் வேதனை அறிந்து விரதமிருந்து, எண்ணற்ற தருமங்கள் செய்தான். நேர்மையான வரி வசூலித்து அரசாண்டான். சதானீகனுக்கும் மோட்சம் கிட்டியது. |
|
|
|