|
சீடனுடன் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார் ஒரு ஞானி. வழியில் மலைப்பாதையில் சிரமப்பட்டு ஏறிக் கொண்டிருந்த ஒரு மாட்டு வண்டியைக் கண்டனர். அந்த வண்டியின் அச்சாணி கிறீச், கிறீச், என சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த சீடன் ஞானியிடம், குருவே! அந்த வண்டியை இழுக்கும் காளைகள் எவ்வளவு துன்பப்படுகின்றன. ஆனால், அவை அமைதியாகச் செல்கின்றன. வண்டிச் சக்கரத்தின் அச்சாணிகளோ துன்பப்படுவதுபோல் இப்படிக் கிறீச், கிறீச் எனக் கத்திப் புலம்புகின்றனவே? என்று கேட்டான். ஞான அமைதியாகக் கூறினார். பெரியோர்கள் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொண்டு, அமைதியாக இருப்பர். ஆனால், சிறியோர்களோ சிறு துன்பம் வந்தாலும் பெரிதாகக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்வர். இது உலக இயல்பு. |
|
|
|