|
துறவி ஒருவரைச் சந்திக்க மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்தார் ஒருவர். ஆனால் துறவியோ, பொதுவான விஷயங்களையே பேசிக் கொண்டிருந்து விட்டு அவரை அனுப்பி விட்டார். எதிர்பார்ப்புகளுடன் வந்த அவர் ஏமாற்ற மிகுதியில் அங்கிருந்த சீடர் ஒருவரிடம், நான் தேடி வந்தது எனக்கு வழிகாட்டவல்ல ஒரு குருவை. ஆனால், இங்கு நான் பார்த்தது மற்ற மனிதர்களிலிருந்து வித்தியாசப்படாத ஒரு சாதாரண நபரையே என்று குறைபட்டுக் கொண்டார். உடனே அச்சீடன், செருப்புத் தைக்கும் தொழிலாளி தன்னிடம் ஏராளமான தோல்களை வைத்திருப்பார். கேட்பவர்களின் காலுக்குத் தக்கபடி தோலைக் கத்தரித்துத் செருப்பைத் தைப்பார். அதேபோல்தான் எங்கள் குருநாதரும். தம்மைக் காண வருபவர்களின் தகுதிக்கு ஏற்றபடியே ஞானத்தை அருள்வார் என்றான். |
|
|
|