|
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் இமயமலையில் செங்குத்தான மலைப்பாதை ஒன்றின் வழியாக சென்று கொண்டிருந்தார். வழியில் வயோதிகர் ஒருவர் மலைச்சரிவு ஒன்றில் ஏற முடியாமல் களைத்துப்போய் ஒரு பாறையில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த வயோதிகர் விவேகானந்தரிடம். மகனே! இந்தப் பாதையை எப்படி நான் கடந்து செல்வேன்? என் கால்கள் நடக்க மறுக்கின்றனவே. என்னால் ஒரு அடிகூட நடக்க இயலாது! என்று கூறினார். விவேகானந்தர் அதைக்கேட்டு, பெரியவரே! சற்று கீழே பாருங்கள். உங்கள் கால்களுக்குக் கீழே தெரிகின்ற அந்த நீண்ட மலைப்பாதை முழுவதும் உங்களால் கடக்கப்பட்டதுதான். உங்கள் முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உங்கள் கால்களுக்குக் கீழே வந்து விடும். தன்னம்பிக்கைதான் முக்கியம் என்று சொன்னார். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அந்த வயோதிகளுக்கு உற்சாகம் பிறக்க, உடனே எழுந்து நடக்கலானார். |
|
|
|