|
மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர், அர்ஜுனனின் தேர் சாரதியாக இருந்தார். ஒருநாள் போர் முடிந்து, வீரர்கள் பாசறைக்குத் திரும்பினர். அர்ஜுனன் யுத்தம் செய்த களைப்பில் துõங்கி விட்டான். கிருஷ்ணர் குதிரை லாயத்திற்கு சென்று குதிரையை தேங்காய்நாரினால் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார். குதிரையின் கனைப்பைக் கேட்ட அர்ஜுனன் எழுந்தான். பணியாட்கள் செய்யும் வேலையை கண்ணன் செய்வது கண்டு திகைத்தான். என்ன கிருஷ்ணா! இந்த வேலையைக் கூடவா நீ செய்ய வேண்டும்? என்றான். கடமை என்று வந்து விட்டால், அதை முழுமையாகவும்,சிறப்பாகவும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது. நீ எனக்கு சாரதி பணியைக் கொடுத்தாய். சாரதி தானே குதிரைகளுக்கு பொறுப்பாளன். அந்தக் கடமையைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல! குதிரையை நானே குளிப்பாட்டுவதால், அதுஎன்னுடன் நட்பாக இருக்கிறது. போர்க்களத்தில் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறி விடு. வெற்றி உன் கைகளில்! என்று உபதேசம் செய்தார். கண்ணனின் கடமை உணர்வு கண்டு அர்ஜுனன் வியந்தான். |
|
|
|