|
அர்ஜுனனின் மனைவி சுபத்ரை கருவுற்றாள். இவள் கிருஷ்ணரின் சகோதரி. ஒருநாள் கிருஷ்ணன் அவளுக்கு போர் வியூகங்கள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவளுக்கு அதில் அதிகநாட்டமில்லை. கேட்டுக் கொண்டே துõங்கிவிட்டாள். ஆனால், வயிற்றில் இருந்த அபிமன்யு கேட்டுக் கொண்டேயிருந்தான். கருவிலேயே போர் நடவடிக்கைகள் பற்றி கேட்டிருந்த அபிமன்யூ, குருக்ஷேத்ர போர்க்களத்தில் அதைச் சரியாகச் செய்தான். பலரைக் கொன்றான். ஆனால், துரோணர் அமைத்த போர் வியூகத்தில் இருந்து தப்பிக்கும் வழி பற்றி கண்ணன் அன்று சொல்லவில்லை. அதற்குள் சுபத்ரை விழித்து விட்டாள். அசதியில் துõங்கி விட்டதாகச் சொல்லி மன்னிப்பு கேட்டு விட்டு, தன் அறைக்கு போய் விட்டாள். இந்த வியூகம் பற்றி தெரியாமல் அபிமன்யு இறந்து போனான். இதைத்தான் விதி என்பது! கடவுளே நண்பனாக இருந்தாலும்கூட, விதியை அனுபவித்துதான் தீர வேண்டும் போல் இருக்கிறது! |
|
|
|