|
கிருஷ்ணர் வாழ்ந்த கோகுலத்தில் ஒரு வழக்கம்... எல்லாருமே, கிருஷ்ணனின் வீட்டிற்கு வந்து, வாசலில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கில் தங்கள் விளக்கை ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் செல்வார்கள். அந்த விளக்கால் தங்கள் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுவார்கள். காரணம், கிருஷ்ணர் வீட்டு விளக்கில் விளக்கேற்றிச் சென்றால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை.அந்த ஊருக்கு புதிதாக திருமணமான சுகுணா வந்தாள். அவளுக்கு கிருஷ்ணன் மீது தீவிர பக்தி. அவனது வீட்டுக்குப் போய் விளக்கேற்றி வரும் நேரத்தில், அவனைக் கண்குளிரக் காணலாமே என கணக்குப் போட்டாள். ஆனால், சுகுணாவின் மாமியார் அதற்கு அனுமதி தரவில்லை.கிருஷ்ண பக்தியில் மூழ்கி குடும்பத்தைமறந்து விடுவாளோ...தன் மகனின் வாழ்க்கை என்னாவது என்ற பயம்!ஒருநாள், மாமியாருக்கு கடும் காய்ச்சல். அன்று விளக்கேற்றி வர சுகுணாவை விட்டால் ஆளில்லை என்ற நிலை.. சுகுணா கிளம்பி விட்டாள்.கிருஷ்ணனைகண்குளிரத் தரிசித்தபடியே விளக்கை பற்ற வைத்தாள். விளக்கு எரிந்தது. அவளது விரல் தீக்குள் இருந்தது. ஆனால், கிருஷ்ணனோடு ஐக்கியமாகி விட்டதால் விரலில் சூடு படுவது கூட தெரியவில்லை. ஊரே அதிசயமாகஇதைப் பார்த்தது. கிருஷ்ணனோ சிரித்துக் கொண்டிருந்தான்.அவளோ அதை ரசித்துக் கொண்டிருந்தாள். மாமியாருக்கும் விஷயம் தெரிந்து விட்டது. பக்திக்கு அவளால் எப்படி கட்டுப் போட முடியும்?பக்தி செய்யாதே என்று சொல்வதோ, தடுப்பதோ பெரும் பாவம். கடவுளுடன் ஒன்றிப்போவதே நிஜமான பக்தி.
|
|
|
|