|
போஜராஜன் அவையிலிருந்த, ராஜகவி ஒருவர் தெருவில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முதியவர் செருப்பு அணியாத காலுடன் நடப்பதைப் பார்த்தார். மனம் பொறுக்காத கவி தன் செருப்பை கொடுத்தார். முதியவர் மறுக்கவே, ஐயா! என்னால் வெயிலைத் தாங்கிக் கொள்ள முடியும்! உங்களால் தாங்க முடியுமா? என்ற கவி, அவரிடம் செருப்பைக் கொடுத்து விட்டு சூட்டில் நடந்தார். அப்போது பட்டத்து யானையுடன் அரண்மனை பாகன், அங்கு வந்தான். செருப்பின்றி நடந்த அவரை, யானையில் ஏற்றிக் கொண்டான். ராஜகவி யானையில் வந்த வழியில், போஜராஜன் தன் ரதத்தில் வந்து கொண்டிருந்தான். ராஜகவியைக் கண்டதும், கவிஞரே! எப்படி உமக்கு யானை சவாரி கிடைத்தது? என கேட்டான்.தானத்தின் மகிமை தான் மன்னா! என்றார் ராஜகவி. அப்படி என்ன தானம் செய்தீர்கள்? என்றான் போஜன்.என் பழைய செருப்பை ஒரு முதியவருக்கு தானம் கொடுத்தேன். அதன் பலனாக பட்டத்து யானையில் ஏறி சவாரி செய்யும் பாக்கியம் கிடைத்தது, என்றார் ராஜகவி. மன்னனும் தானத்தின் பெருமையை உணர்ந்தான். |
|
|
|