Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நம்பிக்கை என்பது!
 
பக்தி கதைகள்
நம்பிக்கை என்பது!

குமாரிலபட்டர் என்பவர் வேதங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மண்டனமிஸ்ரர் இவருடைய சீடர். குமாரிலபட்டர் காலத்தில் புத்த மதம் பரவலாக இருந்தது. அவர்கள் வேதத்தை குறை கூறி வந்தனர். இது குமாரிலபட்டருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. புத்த மதக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களை எதிர்ப்பது சரியாகாது என்று எண்ணிய பட்டர், புத்த குருகுலத்தில் சீடராகச் சேர்ந்து நற்பெயர் பெற்றார். அவருடைய குருததாகதர்.

ஒரு நாள் ததாகதர் பாடம் நடத்தும்போது வேதங்களையும், கடவுளையும் கடுமையாக நிந்தித்தார். அவருடைய வார்த்தைகள் பட்டரின் மனதை மிகவும் வருத்தியதுடன், கண்ணீரையும் வரவழைத்தது. பட்டர் கண்ணீர் சிந்துவதைக் கண்ட ததாகதர் அவர் ஒரு வேதியர் என்பதைக் கண்டு அவரைக் கொல்ல முயன்றார். மேல் மாடியிலிருந்து அவரைக் கீழே தள்ளி விட்டார். விழும் போது வேதம் உண்மையானால் நான் பிழைப்பேன் என்று இரு கரங்களையும் குவித்தார். விழுந்தும் பிழைத்துக் கொண்டார். ஆனால், ஒரு கண்ணில் மட்டும் பார்வை பறிபோனது. இதற்கான காரணத்தை சிந்தித்த பட்டர், வேதம் உண்மை என்று நம்பாமல் உண்மையானால் என்று அரைகுறை நம்பிக்கையால் சொன்னதால்தான் பார்வை பறிபோயிற்று என்பதை அறிந்து கொண்டார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar