|
திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிராமத்தான் ஒருவன் திடீரென ஓவென்று அழ ஆரம்பித்தான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து விசாரித்தார்கள். அநியாயமா பத்து லட்சம் ரூபாய் நஷ்டமாயிடுச்சே! என்று கதறித் தீர்த்தான். எப்படி நஷ்டம் வந்தது? உனக்கு ஏது அவ்வளவு பணம்? எந்த வியாபாரத்தில் போட்டு நஷ்டம் அடைந்தாய்? என்றெல்லாம் அக்கறையுடன் விசாரித்தார்கள். இந்த பேப்பரில் ராஜஸ்தான் லாட்டரிச் சீட்டு ரிசல்ட் வந்திருக்கிறது. முதல் பரிசு 10 லட்சம், அதுதான் நஷ்டமாகிவிட்டது! என்று அவன் தேம்பி அழுதான். நீ லாட்டரிச் சீட்டு வாங்கி, அதைத் தொலைத்து விட்டாயா? என்று கேட்டார்கள் சுற்றி இருந்தவர்கள். இல்லை, லாட்டரிச் சீட்டு வாங்க மறந்து விட்டேன். அதனால்தான் அழுகிறேன்! என்றான் அந்தக் கிராமத்தான். இப்படித்தான், இல்லாத பிரச்னைகளை எண்ணி எண்ணி, அதற்காகவே கவலைப்பட்டு, பயந்து, மன இறுக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர். |
|
|
|