|
ஒரு துறவி, தவறான வழிகளில் பொருள் ஈட்டிய செல்வந்தரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, நல்ல வழிகளில் திரட்டும் செல்வம்தான் சிறந்தது. தீய வழிகளில் வரும் பணம் பாவத்தைத் தரும், கேடு விளைவிக்கும் என்றார். செல்வந்தர் அதை நம்பக் தயாராக இல்லை. எந்த வழியில் வந்தால் என்ன? செல்வம் செல்வம்தான் என வாதிட்டார். உடனே துறவி உள்ளே சென்று ஒரு சொம்பில் பால் கொண்டு வந்து செல்வந்தரிடம் கொடுத்துப் பருகச் சொன்னார். அதைப் பருகிய அவர் முகம் சுளித்து, பாலில் மண்ணெண்ணெய் வாடை வருகிறது என்று சொன்னார். அதற்கு, உண்மைதான். அடுப்பில் நெருப்பு அணைந்து விட்டதால் சிம்னி விளக்கில் பாலை சூடாக்கி எடுத்து வந்தேன். அதுதான் மண்ணெண்ணெய் வாடை வருகிறது. அடுப்பில் இருப்பதும் நெருப்பு தான். சிம்னி விளக்கில் இருப்பதும் நெருப்புதான். இரண்டிலும் பால் சூடாகிறது. ஆனால், சிம்னி விளக்கில் சூடாக்கினால் பாலில் மண்ணெண்ணெய் வாடை வருகிறது. அதுபோலத்தான் தவறான வழிகளில் ஈட்டும் செல்வத்திலும் பாவ வாடை அடிக்கும் என துறவி விளக்க, செல்வந்தர் மனம் திருந்தினார். |
|
|
|