|
ஒருவன் வனம் ஒன்றினள் சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு இருந்த மரத்தின் கிளையில் சிறிய பிராணி ஒன்று படுத்திருந்தது. அது அவன் கண்களுக்குச் சிவப்பாகத் தெரிந்தது. சற்று நேரத்தில் அங்கு வந்த அவனுடைய நண்பனின் கண்களுக்கு பச்சை நிறமாகத் தெரிந்தது. மூன்றாவதாக ஒருவன் அங்கு வந்து சேர்ந்தான். அவனுடைய கண்களுக்கு மஞ்சள் நிறமாகக் காட்சியளித்தது. அவ்விடத்துக்கு அடுத்தடுத்து வந்த பலரும், இந்தப் பிராணி கருப்பு நிறம், நீலநிறம் எனப் பலவாறாகச் சொன்னது மட்டுமின்றி, தாங்கள் பார்த்த நிறமே சரியென்றும் வாதிட்டனர். அம்மரத்தின் கீழ் ஓர் மகான் அமர்ந்திருந்தார். இறுதியாக, அவர்கள் அவரிடம் தங்களுடைய வாதத்தைக் கூறினர். அவர், நீங்கள் பார்த்த பிராணி பச்சோந்தி. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு நிறம் காண்பிக்கும். இதைப்போலத்தான் ஆசைவயப்பட்ட மனிதனும். தன் ஆசையை தர்மம், நேர்மை, ஒழுக்கம்... என்று வார்த்தைகளால் பூசி மெழுகுவான். இதை உணர்ந்து விலக்குவதே ஞானம் என்றார். |
|
|
|