|
அப்பாவுவின் தந்தையார் சாத்தப்பப் பிள்ளை திடீரென காலமாகி விட்டதால், குடும்பப் பொறுப்புகள் அனைத்தும் அவர் மீது சார்ந்தது. இத்தனை நாட்களாகத் தந்தையார் திறம்பட பாதுகாத்து வந்த தென்னந்தோப்பை, ஒரு நாள் கடும் கோடைக் காலத்தில் கண்டுவரப் புறப்படார் அப்பாவு. சுடுமணலில், வெற்றுக்காலில் சிறிதும் சஞ்சலமின்றி நடந்த அப்பாவுவின் காலில், மணலில் புதைந்திருந்த ஒரு முள் ஆழமாகக் குத்தியது. முருகையா...! என்று வாய்விட்டு அலறிய அப்பாவு, அந்த முள்ளைப் பற்றி இழுக்க, ரத்தம் பீறிட்டு வழிந்தது. வலியோடு தோப்பில் அப்பாவு உறங்கியபோது, அவ்வூரில் வசித்த தச்சர் ஒருவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, என் அடிமையாகிய அப்பாவுக்கு ஒரு பாதக்குறடு செய்துகொடு! என்று கட்டளையிட்டு மறைந்தான். பாதக்குறட்டுடன் தச்சர் தோப்புக்கு வந்து, அப்பாவுவை எழுப்பி விபரம் கூறியபோது, கண்ணீர் பெருக, ஆனந்தம் பொங்க அப்பாவு என்ற பாம்பன் சுவாமிகள், குகனின் கருணையை ஒரு பாடலாகப் பதிவு செய்துள்ளார்.
கொடிய கோடையிற் சுடுமணற்கணே குருதி பாய எனடியினிலே ஏறுமுள் வடிகண்ணீரிலே நனைத னுள்கியும் மழவனுக்கணி குறடு அளித்து என்று அடியை நாடுமோர் தபதிமாற்புகள் நருளொர் தண்ணளி இறைவ என்னையும் மிடியா னாகவே விடுவை யோஅயில் மிளிர்கை யாளியே விபதர்மீறியே!
என்று முருகப் பெருமான் தன்னை நிழலாய்த் தொடர்ந்து வருவதை, நெருக்குருகப் பாடினார் பாம்பன் சுவாமிகள். |
|
|
|