|
இரவு பகலென்று இறைவனையே நினைத்து வாழ்ந்த மகான் ஒருவர், தன் தவ வலிமையால் இறைவனைக் காண விரும்ப, நொடிப் பொழுதில் சொர்க்கம் அடைந்தார். சொர்க்கத்தின் வாசலில் ஏராளமான தேவர்கள் நின்றிருந்தனர். அவர்களுள் ஒருவர், தாங்கள் எங்கிருந்து வருகிறீர்? என்று கேட்டார். பூமியிலிருந்து என்றார் மகான். பூமியில் அவர் இருப்பதாகத்தானே நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? என்ன சொல்கிறீர்கள்... கடவுள் சொர்க்கத்தில் இல்லையா? அவரைக் காணத்தான் யுகம் யுகமாய்க் காத்திருக்கிறோம். அவர் தரிசனம் கிடைத்த பாடில்லை. ஒருவேளை பூமியில் இருப்பாரோ என்று அங்கு செல்ல முடிவெடுத்துள்ளோம். பூமியில் அவர் இல்லாததால்தானே நானே இங்கு வந்துள்ளேன்! என்று மகான் கூற, அப்படியென்றால் இறைவன் எங்குதான் உள்ளார்? ஒருவர் கேட்டார். அச்சமயம் சொர்க்க காவலன் ஒருவன் வந்து, யார் ஒருவர் பிறருக்கு உதவிகள் செய்து வாழ்ந்தாரோ, அவர் என்பின்னால் வாருங்கள்.... இறைவனைக் காணலாம்! என்றார். தலை கவிழ்ந்த மகான், பிறருக்கு உதவிகள் செய்யாமல், இறைவனை நினைப்பதிலேயே பொழுதைக் கழித்துவிட்டேன். மீண்டும் பூமிக்குச் சென்று பலருக்கு <உதவி புரிந்து வருகிறேன் என நினைத்தவாறு பூமிக்குத் திரும்பினார். |
|
|
|