|
மழை பெய்து கொண்டிருந்தது. மகளை அழைத்த தாய், பானையைக் கொண்டு போய், கூடுவாய்க்குக் கீழே வை. மழை நீரைப் பிடித்து வைத்தால் நமக்குப் பயன்படும், மற்றவர்களுக்கும் தரலாம் என்றாள். மகள், பானையைக் கொண்டு போய் கூடு வாய்க்கு நேரே வைத்தாள். மழை விட்டதும் தாய் சென்று பார்த்தாள். பானையில் சொட்டு தண்ணீர் கூட இல்லை. கூடுவாய்க்கு நேராகத்தான் பானையை வைத்தாள். நன்றாக மழை பெய்தது. பானையில் துளி ஓட்டையும் இல்லை. ஆனாலும் பானையில் சொட்டு தண்ணீர் இல்லை. ஏன் இல்லை? பானையைக் கவிழ்த்து வைத்து விட்டாள். பானையைக் கவிழ்த்து வைத்தால் மழை நீர் எப்படி உள்ளே போகும்? அதேபோல உள்ளம் கவிழ்ந்து கிடந்தால், இறையருள் உள்ளே புகாது. உள்ளம் மலர்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் இறையருள் உள்ளே புகும். மலர்ந்த உள்ளம் என்பது என்ன? தான் வாழ, பிறரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அதுதான் மலர்ந்த உள்ளம். |
|
|
|