|
பக்த துக்காராம் ஒரு மடாதிபதியைப் பார்க்கச் சென்றார். அப்போது மடாதிபதி பூஜையில் ஈடுபட்டிருந்தார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக துக்காராம் கார்த்திருந்தார். பூஜை முடிந்து, மடாதிபதி எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்தார். துக்காராமும் அவரை நமஸ்கரித்து, பிரசாதம் வாங்கினார். யார் நீ? என்று மடாதிபதி கேட்டார். துக்காராம், பல வருடங்களாக தங்களைத் தரிசிக்கக் காத்திருந்தேன். இப்போதுதான் காலம் கனிந்தது என்றார். எப்போது வந்தாய்? பால்காரன் கொடுத்த பால் தண்ணீராக இருக்கிறது; அவனை விசாரிக்க வேண்டும் என்று தாங்கள் பூஜையின்போது நினைத்தீர்களே... அப்போதே நான் வந்தேன். இப்போது மடாதிபதி, துக்காராமின் காலில் விழுந்து வணங்கினார். |
|
|
|