|
பெரும் செல்வந்தன் ஒருவன் துறவி ஒருவரை நாடி வந்தான். சுவாமி, நான் தினமும் எல்லா தெய்வங்களையும் வணங்கி, எல்லா பூஜைகளையும் தவறாமல் செய்கிறேன். இருந்தும் எனக்கு நிம்மதியே கிட்டவில்லை. ஏன்? என்று கேட்டான். விவசாயி ஒருவன் தன் வயலுக்கு நீர் பாய்ச்சுகிறான். எல்லாப் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ந்திருக்கும் என அவன் நம்புகிறான். ஆனால், பயிர்கள் வாடத் தொடங்கின. விவசாயி ஏன் இப்படி ஆனது என்று வருந்தினான். அவன் வயலை சரியாக ஆராய்ந்து பார்த்திருந்தால், அவன் பாய்ச்சிய நீர், எலிவலைகளின் உள்ளே பாய்ந்து வீணானதை அறிந்திருக்க முடியும். ஆனால் அவனோ அவ்வாறு செய்யாமல் வீணாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். நீயும் அந்த விவசாயியைப் போலவே கடவுளைப் பக்தியுடன் வணங்கினாலும் உன் மனதில் பொன், புகழ், மண் ஆசைகள் எலி பொந்துகளைப் போல் இருப்பதால்தான் உனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. அவற்றை நீக்கிவிட்டாலே போதும், மனம்முழுக்க அமைதி நிரம்பி விடும்! துறவி சொல்ல, மனத்துன்பம் நீங்கிய நிறைவோடு விடை பெற்றான் பணக்காரன். |
|
|
|