|
அஜாமிளன் என்பவன், மனைவியை பிரிந்து, வேலைக்காரியுடன் சேர்ந்து வாழ்ந்தான். பத்து குழந்தைகள் பெற்றான். பத்தாவது பிள்ளைக்கு நாராயணன் என்றுபெயரிட்டான். அஜாமிளனுக்கு நாராயணன் மீது பிரியம் அதிகம். அஜாமிளனின் இறுதிக்காலம் வந்தது. நோய்வாட்டி வதைத்தது. புலம்ப ஆரம்பித்தான். எமதுõதர்கள் வந்து விட்டனர். உயிர் பிரியும் நேரம் நாகுழற ஆரம்பித்தது. பிள்ளைப்பாசம் உடையவனல்லவா! கடைசி நிமிடத்தில் தன்னையும் மறந்து தன் ஆசை புதல்வனை நாராயணா...என்று அழைத்தான்.நாராயணனும் ஓடி வந்தான். அந்த நிமிடமே உயிர்பிரிந்தது.கடைசி நேரத்தில்,நாராயணன் நாமத்தை உச்சரித்ததால் வைகுண்டத்தில் இருந்து பெருமாளின் துõதர்களும் வந்து விட்டனர். எமதுõதர்களும், பெருமாள் துõதர்களும் ஒரே இடத்தில்! இந்த ஜீவனை எங்கு அழைத்துச் செல்வது?இவன் மகாபாவி!மனைவிக்கு துரோகம்செய்தவன். இவனைஎமபட்டணத்திற்குத் தான் அழைத்துச் செல்வோம், என்று எமதுõதர்கள்வாக்குவாதம் செய்தனர்.நாராயண நாமத்தை சொன்னதால் புண்ணிய ஆத்மாவாகி விட்டான்.இவன் வைகுண்டம் செல்ல தகுதியானவன், என்று எதிர்வாதம் செய்தனர் பெருமாள் துõதர்கள்.சொர்க்கம் செல்ல விரும்பினால் இயன்ற வரையில் கடவுளின் பெயரை உச்சரியுங்கள். குழந்தைகளுக்கு கடவுள்பெயரையே சூட்டினால், உங்களை அறியாமலேயே இறைநாமத்தையு ம்சொன்னவர்களாவீர்கள்.
|
|
|
|