|
ஆலிலையில் பள்ளி கொண்ட கிருஷ்ணர் தன் கால் பெருவிரலை வாயில் வைத்து சுவைத்துக் கொண்டிருந்த விஷயம், என்றும் பதினாறு உடைய மார்க்கண்டேய மகரிஷிக்கு தெரிய வந்தது. இவர் ஏன் குழந்தை வடிவாகி, இப்படி செய்கிறார்? என்று அறியும் ஆசையில் அவரைப் பார்க்க புறப்பட்டார். மாயனல்லவா கிருஷ்ணன்! பலத்தமழை பெய்யச் செய்து, மகரிஷியின் ஆஸ்ரமத்தைச் சுற்றி கடும் வெள்ளத்தை உண்டாக்கி விட்டார். மார்க்கண்டேயருக்கு தான் மரணமே கிடையாதே! அவரும் நீரில் மிதந்தார். அப்போது தண்ணீரில் ஆலிலை மிதந்து வந்தது. அதில் கிருஷ்ணர் சயனம் கொண்டிருந்தார். கட்டை விரலை வாயில் சுவைத்த வண்ணம் படுத்திருந்த கோபாலனின் அழகில் பரவசம் அடைந்த மார்க்கண்டேயர், அந்தக் குழந்தை மூச்சுக்காற்றை இழுக்கும் போது ஒருகொசுவாகி உள்ளே போனார். வெளியுலகில் என்னென்ன இருக்கிறதோ, அத்தனையும் உள்ளே இருக்கக் கண்டார். வெளியே வந்து, கிருஷ்ணா! உன் கட்டை விரலை சுவைக்க காரணம் தெரிந்து கொள்ளலாமா? என்றார். மகரிஷியே! என்திருவடியை சிந்திப்பவருக்கு என்ன தான் ஆனந்தம் கிடைக்கிறது என்று அறிய ஆர்வம் வந்தது. அதனால் கால்விரலை சுவைத்தேன், என்றார். சேஷ்டையான கண்ணன் தான்!
|
|
|
|