|
காட்டுக்கு சென்ற ராமன், சித்ரகூடம் பகுதியில் தங்கியிருந்தார். அங்கு வந்த பரதன் ராமரை அயோத்திக்கு திரும்பும்படி வேண்டினான். தந்தையின் கட்டளையை நிறைவேற்ற, காட்டிலேயே இருக்கப் போவதாக ராமர் சொல்லி விட்டார். நீங்கள் வனவாசம் முடிக்கும் வரை நானும் தவக்கோலத்தில் இருப்பேன். 14 ஆண்டுகளும் உங்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்வேன், என்ற பரதன், ராமனின் பாதுகையை (காலணி) பெற்றுக் கொண்டு கிளம்பினான். அதை அயோத்தியில் ஒரு சிம்மாசனத்தில் வைத்து ராமரே ஆட்சி செய்வதாக கருதி, அவரது பிரதிநிதியாக நிர்வாகப்பணிகளைக் கவனித்தான். பிறகு, ராமர் அத்திரி முனிவரின் ஆஸ்ரமம் சென்றார். அவரும், அவரது மனைவி அனுசூயாவும் ராம லட்சுமணரை வரவேற்றனர். அவர்களிடம் முனிவர், இனி உலகில் கஷ்டப்படுவோர் அனைவரும், உங்களை எண்ணி ஆறுதல் பட்டுக் கொள்வார்கள். அரண்மனையில் சுகபோகமாக வாழ வேண்டிய சீதையும் உடன் வந்து ,கணவரோடு வாழ்வதே பெண்ணுக்கு பெருமை என்று நிரூபித்து விட்டாள், என்றனர். உலக மக்களுக்கு உங்கள் வாழ்க்கை ஒரு பாடம், என்றார்.
|
|
|
|