|
ஞானி ஒருவரிடம் அவரது சீடன் ஞானத்தில் சிறந்த ஞானம் எது? என்று கேட்டான். இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தில் சோர்வடையாமலும் இருப்பதே ஞானம் என்றார் ஞானி சீடனுக்கு விளங்கவில்லை. உடனே, அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஒரு கழுதையைக் காட்டி, இந்தக் கழுதைக்கு, காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டை சுமக்கிறோமே என்ற வருத்தமும் இல்லை; மாலையில் சுத்தம் செய்த துணிகளைச் சுமந்து செல்கிறோம் எனும் மகிழ்ச்சியும் இல்லை. இதைப்போல துன்பத்திலும், இன்பத்திலும் திளைக்காமல் இருப்பதே ஞானம் என்றார் ஞானி. |
|
|
|