Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாட்டு கேட்க வந்தேன்!
 
பக்தி கதைகள்
பாட்டு கேட்க வந்தேன்!

திருச்செந்தூரில் வசித்த முத்தம்மை சிறுவயதில் இருந்தே முருகன் மீது பக்தி கொண்டவள். கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம், அங்கிருந்த கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் முருகனை பூஜிப்பதை கவனிப்பாள். தானும் அவர்களோடு சேர்ந்து பாட விரும்பினாள். ஒருமுறை பக்தர்களிடம் சென்று, பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்ற கந்தரனுபூதி பாடலைப் பாட நான் விரும்புகிறேன். அனுமதி கொடுங்கள், என்றாள். பக்தர்களும் சம்மதித்தனர். அவள் பாட ஆரம்பித்தாள். காலம் சென்றது. முத்தம்மைக்கு வயதானது.அவள் மனதில் ஒரு ஏக்கம்! முருகா! உன்னை எவ்வளவோ காலமாக பாடிஇருக்கிறேன். இதை எந்த பலன் கருதியும் நான் பாடவில்லை. ஆனாலும், இந்த கிழவியின் மனதில் ஒரு ஆசை. என் உயிர் பிரிவதற்குள் உன்னை தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் என வேண்டுவாள். ஒருநாள், அவள் பாடிக் கொண்டிருந்த நேரத்தில், யாரோ தன் அருகில் நிற்பது போல இருந்தது. முத்தம்மை திரும்பிப் பார்த்தாள்.

இளைஞன் ஒருவன் நின்றான். அவள் தன்னைப் பார்த்ததும், ஒரு தூண் அருகில் சென்று மறைந்து கொண்டான்.முத்தம்மை அவனிடம், மகனே! ஏன் மறைந்து நிற்கிறாய்? அருகில் வந்து கேட்கலாமே! என்றாள். ஆனால், அவனோ அங்கிருந்து ஓடி விட்டான். என்ன காரணமோ தெரியவில்லை. அவனைப் பார்த்ததில் இருந்து, மூதாட்டியின் மனம் ஆனந்தத்தில் மிதந்தது.  அன்றிரவு, முருகப்பெருமானின் திருவடிகளைச் சிந்தித்தபடியே தூங்கினாள். பொழுது புலரும் நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.முத்தம்மை ஜன்னல் வழியாக,யாரப்பா? என்று கேட்டாள். மண்டபத்தில் பார்த்த அந்த இளைஞனும், அவன் மனைவியும் வாசலில் சிரித்தபடி நின்றனர். மகனே வா! இவள் தான் உன் மனைவியா? உலகத்துபெண்களின் அழகெல்லாம் இவள் முகத்தில் கொட்டிக்கிடக்கிறதே! உள்ளே வாருங்கள்! நீங்கள் யார்? என்றாள் மூதாட்டி.அம்மா! இவ்வளவு காலமாக என்னைப் பார்த்துக் கொண்டுஇருக்கிறீர்களே!இன்னுமா என்னை அடையாளம் தெரியவில்லை! நானும் இதே ஊர் தான். உடனே எங்களுடன் கிளம்புங்கள், என்று அழைத்தான் இளைஞன்.மூதாட்டிக்கு ஏன் என்று கேட்கத் தோன்றவில்லை. இளைஞனும், அவன்மனைவியும் முன்னே நடக்க மூதாட்டி பின் தொடர்ந்தாள். மூவரும் கோயிலை அடைந்தனர். அங்கு இளைஞன் முருகனாகவும், அவன் மனைவி வள்ளியாகவும் மாறி காட்சியளித்தனர்.அம்மா! பக்தியுடன் பாடுவோர் இருக்கும் இடத்தில் எல்லாம் நான் இருப்பேன். நீங்கள் என்று பாட ஆரம்பித்தீர்களோ, அன்று முதல் உங்கள் பாடலைக் கேட்டுவருகிறேன். இன்று உங்கள் பார்வையில் சிக்கிக் கொண்டேன், என்று சொல்லிச் சிரித்தார் முருகன். வள்ளி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். அந்த அன்பான அணைப்புடன், அவளது உயிர் பிரிய, முருகன் அவளைத் தன் கந்தலோகத்துக்கு அழைத்துச் சென்றார். இப்போது, முத்தம்மையின் பாடல் ஒலி அங்கே கேட்டுக் கொண்டிருக்கிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar