|
இளவரசராக இருந்த மகாவீரர் துறவியானார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு, வெயிலோ, மழையோ எதுவும் தெரியவில்லை. எப்போதாவது கண் விழித்தால், இரக்கப்பட்ட சிலர் உணவளித்தனர். இதைக் கேள்விப்பட்ட மகாவீரரின் மனைவி யசோதை மனம் வருந்தினார். தங்கள் அன்பு மகள் பிரியதர்ஷினியைப் பார்த்தால், அவரது துறவு எண்ணம் மாறும் எனக் கருதி, மகளுடன் காட்டுக்கு வந்தார்.சுவாமி! எங்களைப் பிரிந்து வந்தது நியாயமா? உங்களை விட்டால் வேறு யார் எங்களுக்கு இருக்கிறார்கள்? என்று அழுதார்.மகாவீரரோ,யசோதா! உன்னை விடச் சிறந்தவர் உலகில் யாருமில்லை. ஆனால், இப்போது நான் ஆத்மாவை அறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன், என்றார்.என் மீது அன்பு இல்லாவிட்டாலும், குழந்தைக்காகவாவது வீட்டுக்கு வாருங்கள், என்று கதறினார்.யசோதா! எல்லா உயிர்கள் மீதும் அன்பு கொண்டிருக்கிறேன். இந்த உலகமே என் குடும்பம். எல்லா குழந்தைகளும் எனக்கு பிரியதர்ஷினிகள் தான்! என்று சாந்தமாகக் கூறினார்.தன் கணவரின் உறுதியான மனநிலை யசோதைக்கு புரிந்தது. மகளுடன் வீட்டுக்கு கிளம்பி விட்டார். |
|
|
|