|
மந்திரியிடம் பேசிக் கொண்டுஇருந்த மன்னர், பழம் நறுக்க கத்தியை எடுக்க, தவறுதலாக கையில் பட்டு ரத்தம் வந்தது. அதைக் கண்ட மந்திரி, எல்லாம் நன்மைக்கே என்றார் இயல்புடன். மன்னர் கோபத்தில், என்ன உளறுகிறீர்? என கத்தினார். ஆம்! மன்னா! வேலைக்கு ஆயிரம் பேர் இருக்க, தாங்கள் இப்படி கையை நறுக்கி கொண்டதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. எல்லாம் நன்மைக்காகவே! என்றார் மந்திரி. கொந்தளித்த மன்னர், இவரை சிறையில் அடையுங்கள், என்று உத்தரவிட்டார். சிலநாள் கழித்து தனியாகக் காட்டுக்குப் புறப்பட்டார்.அங்குள்ள காட்டுவாசிகளிடம் சிக்கிக் கொண்டார். காளி வழிபாடு செய்யும் அவர்கள், மன்னரை நரபலி கொடுக்க எண்ணி மரத்தில் கட்டி வைத்தனர்.காட்டுவாசிகளின் தலைவன், மன்னரின் கையில் இருந்த ரத்தக் காயம் கண்டு, குறையுள்ள இவனைக் காளிக்கு பலி கொடுப்பது விதிப்படி சரியல்ல என்று சொல்லி அவிழ்த்து விட்டான். உயிர் தப்பிய மன்னர் அரண்மனைக்குத் திரும்பினார்.மந்திரியை விடுதலை செய்து நடந்ததை தெரிவித்தார். நீங்கள் சொன்னது சரியாகி விட்டது. உங்களைச் சிறையில் அடைத்து விட்டேனே என்று வருந்தினார். எல்லாம் நன்மைக்கே! நானோ மற்ற வீரர்களோஉங்களோடு வந்திருந்தால் நிலைமை என்னாகும்?காட்டுவாசிகளிடம் சிக்கி இருப்போமே! அதற்காகவே என்னை சிறையில் அடைக்க நேர்ந்தது, என்றார் மந்திரி.
|
|
|
|