|
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர், பிரம்ம சமாஜத்தின் தலைவர் கேசவசந்திர சேனரைக் காணச் சென்றார். அச்சமயம் அவர், ஜயகோபாலசேனருடைய நந்தவன பங்களாவில் தங்கியிந்தார். ஸ்ரீராமகிருஷ்ணருடன் அவரது உறவினர் ஹ்ருதய முகர்ஜியும் சென்றிருந்தார். இவர்கள் சென்ற சமயம் கேசவ சந்திரசேனர் தம் சிஷ்யர்களுடன் குளத்தில் குளிக்கத் தயாராயிருந்தார். ராமகிருஷ்ணர் அவரைப் பார்த்து, இங்கிருப்பவர்களில் அவர் ஒருவருக்குத்தான் வால் அறுந்துவிட்டது என்றார். இதைக்கேட்ட கேசவசந்திரசேனரின் சீடர்கள் சிரித்தனர். உடனே கேசவசேனர், நீங்கள் இப்படிச் சிரிக்கக் கூடாது. அவர் அவ்விதம் சொல்வதில் ஏதாவது ஆழ்ந்த அர்த்தம் இருக்கும் என்று கூறி கடிந்து கொண்டார். ஸ்ரீராமகிருஷ்ணர் தாம் கூறியதை விளக்கினார். தவளைக் குஞ்சின் வால் தானாக அறுந்து விழும் வரை அதனால் நீரில் மட்டும்தான் வசிக்க முடியும். ஆனால், வால் அறுந்தபின் அது நீரிலும், நிலத்திலும் வசிக்கும் திறனைப் பெறுகிறது. அதேபோல் பகவத்தியானத்தினால் எவருடைய அறியாமை என்கிற வால் அறுந்து விழுந்து விட்டதோ, அவர் தன்னிச்சைப் படி ஆன்மிகக் கடலிலும் மூழ்கலாம் லவுகீக உலகத்திலும் வாழலாம் என்றார். சீடர்கள் அறியாமை நீங்கித் தெளிவு பெற்றனர். |
|
|
|