|
மந்தேஹர் என்னும் மாயாவி அசுரர்கள், சூரியன் மீது பொறாமை கொண்டு வம்புக்கு இழுத்தனர். அடிக்கடி அவர் முன் தோன்றி தாக்குதல் நடத்தி விட்டு மாயமாக மறைந்து விடுவர். இதனால் சூரியன், தன் கடமையைச் சரிவர செய்ய முடியாமல் தவித்தார். விஷ்ணுவிடம் சரணடைந்தார். சூரியதேவா! மந்தேஹர்களுடன் போரிட்டதால் களைத்துப் போயிருக்கிறாய். சில காலம் ஓய்வு எடுத்துக் கொள். அதுவரை நானே உன் பணியை கவனித்துக் கொள்கிறேன் என்ற விஷ்ணு, புதிய சூரியனாக உருமாறி வானில் வலம் வந்தார். அவருக்கு சூரிய நாராயணர் என்ற பெயர் உண்டானது. இதைக் கண்ட விஷ்ணுவின் மனைவி லட்சுமி மகிழ்ந்தாள். கண் கொட்டாமல் அவர் அழகை ரசிக்க ஆசைப்பட்டாள். தாமரை மலராக உருவெடுத்து பூமியை அடைந்தாள். நீர் நிரம்பிய குளங்களில் சிவந்த இதழ்களை விரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். சூரியன் உதித்ததும் தாமரை மலரும் ரகசியம் இதுவே.அதுமுதல் தாமரைதிருமாலுக்கு உகந்ததானது. மாயாவிகள் சூரிய நாராயணனிடமும் தன் வேலையைக் காட்டினர். ஆனால், மாயன்நாராயணன் முன்அவர்களின் வேலைஎடுபடாமல் தோற்றனர். பின் சூரியன் ஓய்வை முடித்து கடமையாற்றத் தொடங்கினார். |
|
|
|