|
மன்னர் ராஜசிம்மரிடம் வந்த புலவர்,வள்ளல் என்று தங்களைப் பலரும் புகழ்ந்து சொல்லக் கேள்விப்பட்டேன். என் மகளின் திருமணத்திற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றார். நாளை வாருங்கள். வேண்டியதை பெற்றுச் செல்லலாம் என்றார் மன்னர்.இதைக் கேட்ட அமைச்சர், மன்னா! நாளை என்பது யார் கையிலும் இல்லை. நாளை நாம் உயிருடன் இருப்போமா என்று கூட தெரியாதே! அதனால் தர்ம காரியங்களைப் பொறுத்தவரை நினைத்தவுடனேயே செய்துவிட வேண்டும். புலவருக்கு இன்றே கொடுப்பது தான் முறை, எனஅறிவுரை வழங்கினார்.நல்ல விஷயங்களை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடக் கூடாது என்பதை உணர்ந்த மன்னர், புலவரை அழைத்து பொன், பொருள் வழங்கினார். அவரின் மகளின் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. |
|
|
|