|
தேவ வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் மருத்துவத்தில் புகழ் பெற்று விளங்கினர். இவர்களுக்கு தன்னை விட புகழ் கூடுகிறதே என்ற பொறாமையில், தேவர் தலைவனான இந்திரன், பல துன்பங்களைத் தந்தான்.அந்த வைத்தியர்கள் ஒரு புதிய மந்திரத்தைக்கற்றுக் கொள்ள விரும்பினர். அதைப் படித்தால், தங்கள்தொழில் மேலும் விருத்திஅடையும் என எண்ணினர். இதையறிந்த இந்திரன்,அவர்களுக்கு எந்த முனிவரும் அதைக் கற்றுக் கொடுக்கக்கூடாது என்றும், மீறினால் தலை துண்டிக்கப்படும் என்றும் உத்தரவிட்டான். அவர்கள், வியாசரின்பரம்பரையில் வந்த தத்யங்கர் என்ற முனிவரைச் சந்தித்து நிலையைக் கூறினர். உங்கள் தலையைதற்காலிகமாக எடுத்து விட்டு, நாங்கள் உங்களுக்கு ஒரு குதிரையின் தலையைப் பொருத்துகிறோம். அந்தத்தலையுடன் நீங்கள்மந்திரத்தைக் கற்றுக் கொடுங்கள். இந்திரன் கோபத்தில் உங்கள் தலையை வெட்டினாலும், மீண்டும் உங்கள் தலையைப் பொருத்தி உயிர்பெறச் செய்வோம், என்றனர். அவர்களது ஆர்வத்தை பாராட்டி, அந்த மந்திரத்தை சொல்லித்தந்தார் தத்யங்கர். இதையறிந்த இந்திரன் அவரது தலையை வெட்டிவிட்டான். அஸ்வினி தேவர்கள் அவரது சொந்தத் தலையைப் பொருத்தி உயிர் பெறச் செய்தனர்.மாணவர்களே! அஸ்வினி தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பெரிய இடைஞ்சலை எல்லாம் முறியடித்து மந்திரம் கற்றது போல, நீங்களும் எவ்வளவு கஷ்டப்பட்டாவது பாடங்களை படித்து விட வேண்டும். கேள்வித்தாள் கடினம், பாடங்கள் கடினம், நேரமில்லை என சொல்லிக் கொண்டுகடமையில் இருந்து நழுவ முயலக்கூடாது.புதிய கல்விநிறுவனங்களில் சேரஇருக்கும் இந்த சமயத்தில், உங்களுக்கு சொல்லும்அறிவுரை இதுதான்! |
|
|
|