|
ஒரு சிறுவன், தன்கனவில் சிங்கம் ஒன்று அடிக்கடி வந்துபயமுறுத்துவதாக பெற்றோரிடம் சொன்னான். காலப் போக்கில் அவனது மனநிலை மிகவும் பாதித்தது. எதைப் பார்த்தாலும் பயப்பட ஆரம்பித்தான். பெற்றோர் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவர் அவனிடம், தம்பி, நீ பயப்படும்படியான எந்த உருவத்தைப் பார்த்தாலும் உடனே மனதிற்குள், இந்தஉருவம் எனது பழைய நண்பனாயிற்றே! என்னோடு நட்பு கொண்டவனாயிற்றே! இதைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்! என்று மனதிற்கு உள்ளேயே சொல். அதன் அருகில் தைரியமாகப் போய் தலையில் தட்டு. உனக்கு பயமே இருக்காது. என்றார். அதன்பிறகு, சிறுவனும்அப்படியே தன் கற்பனையில் செய்தான். சிலநாட்களில், அவனது பயம் நீங்கி விட்டது. நமது வாழ்விலும் துன்பம், ஏமாற்றம் போன்ற சிங்கங்களும், கரடிகளும் அடிக்கடிகுறுக்கிடுகின்றன. அவற்றைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். அவை குறுக்கிடும் சமயத்தில், உங்களைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். நீங்கள் என்னை தாக்குவதற்காக வரவில்லை.பரிசோதிக்கவே வந்திருக்கிறீர்கள். என் வாழ்வில் நீங்களும் ஓர் அங்கம், என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அந்த எண்ணமே வெற்றியைத் தரும். |
|
|
|