|
ஒரு பணக்கார வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சிக்காக அந்தணர்ஒருவர் வந்தார். அந்த வீட்டில் நிறைய கன்றுகள் இருந்தன.இதில் ஒரு கன்றை எனக்குத் தாருங்கள். இதை வளர்த்து, பால் கறக்கும் பருவத்தில்,இறைவனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறேன், என்று அவ்வீட்டாரிடம் கேட்டார். அவர்களும் கொடுத்து விட்டனர்.அந்தக் கன்று, ஊர் வரை நடந்து வர சிரமப்படும் என்று இரக்கப்பட்ட அந்தணர், அதை தோளில் சுமந்தபடி நடந்தார். வழியில் மூன்று திருடர்கள்வந்தனர்.முதலில் ஒருவன்அந்தணரிடம், சாமி! யாராவது பன்றிக் குட்டியைச் சுமப்பார்களா? இதை ஏன் சுமந்து செல்கிறீர்? எனக் கேட்டான். மடையா! மடையா! இந்த கன்றுகுட்டி! பக்கத்து ஊர்மிராசுதார் எனக்கு பரிசாகக் கொடுத்தார், என்றதும் அவன் போய்விட்டான்.அடுத்தவன் வந்தான்.யாராவது கழுதைக்குட்டியை சுமப்பார்களா? என்றதும், அவனுக்கும் பதில் சொன்னார் அந்தணர்.மூன்றாமவன் வந்தான்.சாமி! நீர் தான் இறைச்சி சாப்பிடமாட்டீரே! பிறகேன், ஆட்டுக்குட்டியை சுமந்து செல்கிறீர்? என்றதும்அந்தணருக்கு பயம் வந்து விட்டது. மிராசுதார் கருமி போலும்! என்னை ஏமாற்ற ஏதோ ஒரு பூதத்தை தந்து விட்டார் என நினைக்கிறேன். யாருமே இதைக் கன்று எனச் சால்லவில்லையே என நடுங்கியவர், கன்றை கீழே இறக்கி விட்டுச் சென்றார். திருடர்கள் எளிதாகக் கவர்ந்து சென்று விட்டனர்.மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, நமது நல்லமுடிவுகளை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. நம் முடிவில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். சுயபுத்தி தான் முக்கியம். |
|
|
|