|
பெரிய மரங்களை நீ அடித்துக் கொண்டு வந்து விடுகிறாய்! ஆனால், நாணல் புல், கோரை புல், தர்ப்பைப்புல், ஆகியவற்றை மட்டும் விட்டு விடுகிறாய். இது எந்தவிதத்தில் நியாயம்? என்று சமுத்திரராஜன் யமுனை முதலிய நதிகளோடு வந்த கங்கா நதியைப் பார்த்துக் கேட்டான். சமுத்திரராஜனே! வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிவரும்போது கரையில் உள்ள நாணல் முதலிய புற்கள் எங்களைக் கண்டு அம்மா என்று தலை வணங்கி வரவேற்கின்றன. அதனால் அவற்றை அன்புடன் அணைத்து அப்படியே விட்டு விடுகிறோம். அகங்காரத்தடன் நிமிர்ந்து நிற்கும் மரங்களை வேருடன் அடித்துக் கொண்டு வந்து விடுகிறோம். அடக்கம் வாழவைக்கும்; அடங்காமை தாழவைக்கும். என்று கூறியது கங்கா நதி. இதனை சர சயனத்தில் பாண்டவர்களுக்கு அரச நீதியை உபதேசித்து பீஷ்மர் கூறுகிறார். |
|
|
|