|
தேவேந்திரன் சபையில், வாமதேவர் என்ற மிகப்பெரிய அறிவாளி இருந்தார். அவர் ஒரு மாமுனிவர், பெரும் ஞானி இந்திரன் சபையில் கிரௌஞ்சகன் என்ற பெயருடைய ஓர் ஆணவக்காரனான கந்தவர்வன். வாமதேவரை அலட்சியப்படுத்தினான். அவமானப்படுத்தினான். இதனால் கோபங் கொண்ட வாமதேவர், அவனை எலியாகப் போகும்படி சபித்துவிட்டார். கிரௌஞ்சகன் எலியாக மாறிய பிறகும் கூட, தன் தவறை உணராமல் மேலும் தீயவனாகி, வாம தேவரைப் பழிக்குப் பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு பிற முனிவர்களையும், அவர்களது சீடர்களையும் கொடுமைப்படுத்தினான். அவர்களது ஆசிரமங்களையும் அழித்தான். பராசர முனிவர் விநாயகரிடம் பிரார்த்தனை செய்தார். உடனே பிள்ளையார், அகந்தை கொண்ட கிரௌஞ்சகனின் கொட்டத்தையும் , ஆணவத்தையும், துர் எண்ணத்தையும் அழித்து அடக்கினார். எலி உருவிலிருந்த கிரௌஞ்சகன் மனம் திருந்தியதோடு, தன்னை வெற்றி கொண்ட விநாயகருக்கே தான் வாகனமாக இருக்க விரும்பினான். விநாயகரும் மூஷிகனாக இருந்த கந்தர்வனுக்குப் பூரண அனுக்கிரகமருளி அவனைத் தமது வாகனமாக ஆக்கிக் கொண்டார். இதனாலேயே விநாயகப் பெருமான் மூஷிகவாகனர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். |
|
|
|