|
பகவான் ராமகிருஷ்ணரிடம் ஓர் இளைஞன், சுவாமி! நான் பல சாதனைகள் புரிந்திருக்கிறேன். ஆனாலும், நான் முன்போலவே அஞ்ஞானம் நிறைந்தவனாகவே இருக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் சாதனைகளால் யாதொரு பயனும் இல்லையே என்றான். அவனைப் பார்த்து புன்முறுவல் பூத்த சுவாமிகள், வருஷம் தவறாமல் உழவுத் தொழிலை செய்து வரும் விவசாயி, சில வருடங்கள் மழை பெய்யவில்லை. என்பதற்காக உழவுத்தொழிலை விட்டு விடுவதில்லை. ஆனால், விவசாயி வம்சத்தில் பிறக்காமல், வியாபாரத்துக்காகப் பயிர்த்தொழில் செய்பவர்கள் ஒரு வருடம் மழையின்றி இழப்பு ஏற்பட்டாலும் அத்தொழிலை விட்டு விடுவார்கள். அவர்கள் சுயநலவாதிகள். அதேபோல், தன் ஆயுள் முழுதும் பக்தி செய்தும் கடவுளைக் காணாவிட்டாலும் கூட உண்மையான பக்தன் பகவானின் திருநாமங்களையும், அவனது மகிமைகளையும் கூறாமல் இருப்பதில்லை. காரியம் ஆவதற்காக மட்டுமே இறைவனை வேண்டுபவர்கள் சுயநலவாதிகள். பயனை எதிர்பார்த்து சாதனைகள் புரிபவர்களும் சுயநலவாதிகளே என்றார் ராமகிருஷ்ணர், இளைஞனின் மனதில் தெளிவு பிறந்தது. |
|
|
|