|
கருமி ஒருவன், துறவி ஒருவரைச் சந்தித்து, சுவாமி! எனக்கு நிறைய செல்வம் இருக்கிறது. ஆனால், எனக்குக் குழந்தை இல்லை. நான் இறந்த பிறகு என் சொத்துக்கள் முழுவதும் இந்த ஊர் மக்களுக்குத்தான் சென்றடையப் போகிறது. ஆனாலும், இந்த ஊர் மக்கள் என்னைப் பாவி என்று தூற்றுகிறார்கள். இதற்கு நீங்கள்தான் ஒரு விளக்கம் சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்குத் துறவி சொன்ன விளக்கம் பன்றி ஒன்று பசுவிடம் குறைப்பட்டுக் கொண்டன. பசுவே! மக்கள் உங்களைத்தான் புகழ்கிறார்கள். எங்களையோ நிந்திக்கிறார்கள். நீங்கள் உடம்புக்கு ஆரோக்கியமான பாலைத் தருவது உண்மைதான். ஆனால், நான் இறைச்சி உட்பட என்னையே முழுமையாக அவர்களுக்குத் தருகிறேன். அப்படி இருந்தும் என்னை ஏன் தூற்றுகிறார்கள்? என்று கேட்டது. அதற்குப் பசு, நான் உயிருடன் இருக்கும்போதே மற்றவர்களுக்கு உதவுகிறேன். அதனால் என்னைப் புகழ்கிறார்கள். ஆனால் நீயோ, இறந்த பிறகுதான் அவர்களுக்குப் பயன்படுகிறாய் என்று கூறியது. அதைபோல், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே மற்றவருக்குத் தம்மால் முடிந்த அளவு பயனுள்ள வகையில் வாழ வேண்டும். நீங்களும் வாழும்போதே உங்கள் செல்வத்தைக் கொண்டு துன்பப்படும் ஏழைகளுக்கு உதவி செய்தால் வாழும் காலத்திலேயே மக்கள் உங்களைப் புகழ்வார்கள் என்று கூறினார் துறவி. |
|
|
|