|
ஒரு வீட்டில் சிறிய கட்டில் இருந்தது. மனைவி கணவனிடம், இது சிறிய கட்டிலாக இருக்கிறதே, நமக்கொரு குழந்தை பிறந்தால் என்ன செய்வது? என்றாள்.நமது இடத்தைப் பகிர்ந்து நடுவில்படுக்க வைத்துக் கொள்ள வேண்டியது தான் , என்றான். சரி... இன்னொரு குழந்தை பிறந்தால் என்ன செய்வீர்கள்? என அவள் கேட்க, இதென்ன பிரமாதம்... இன்னும் என் இடத்தை குறைத்துக் கொள்வேன்,என்று இன்னும் நகர்ந்து படுத்தான். மூன்றாவது வந்து விட்டால்... என அவள் கேட்டு முடிப்பதற்குள்,அதற்கா இடமில்லை... என்றவன் இன்னும் சற்று நகர்ந்து போது கீழே விழுந்து காயப்பட்டான்.மறுநாள் நண்பன் ஒருவன், என்னப்பா ஆச்சு! காலிலே கட்டுப்போட்டிருக்கே, என்றான்.அதுவா பொய்யான ஒரு குழந்தைக்காக காலை ஒடிச்சுகிட்டேன், என்றான். உலகிலுள்ள அனைத்து பெற்றவர்களும் இப்படித்தான் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்கின்றனர்... பாசம் செலுத்துகின்றனர். அவர்களிடம் தங்கள் எதிர்பார்ப்பு செல்லாமல் போனால், தங்களை தாங்களே வருத்திக் கொள்கினறனர். எதற்கு இதெல்லாம்... பாசத்திற்கு கூட ஒரு அளவீட்டை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். புரிகிறதா? |
|
|
|