Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » படித்தவரெல்லாம் மேதையல்ல!
 
பக்தி கதைகள்
படித்தவரெல்லாம் மேதையல்ல!

உத்தாலகர் என்னும் மகானிடம், கஹோளர் என்ற சீடன் படித்தார். படிப்பில் கஹோளர் மந்தம். ஆனால், ஒழுக்கசீலர். இதனால், அவர் மீது குரு நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தார். அதே நேரம், படிப்பில் மந்தமாக இருக்கிறாரே என்ற வருத்தமும் குருவுக்கு இருந்தது. ஒரு வழியாக குருகுல வாசம் முடிந்தது. உத்தாலகருக்கு சுஜாதா என்ற மகள் இருந்தாள். அறிவில் படுசுட்டி. தனது சீடன் கஹோளனுக்கு, மகளைத்திருமணம் செய்து வைத்தால் அவளது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று எண்ணிதிருமணமும் செய்து வைத்தார். சுஜாதா கர்ப்பவதியானாள். குழந்தை கருவில் இருக்கும் போதே வேதங்கள் அனைத்தும் தெரிந்தவனாக இருக்கும் வகையில் தெய்வ சங்கல்பம் அமைந்தது. அவ்வேளையில், கஹோளர் தப்புத்தப்பாகமந்திரம் சொல்வார். அதைக் கேட்க சகிக்காமல் குழந்தை வயிற்றுக்குள்ளேயே தன் உடலை முறுக்கிக்கொண்டது. இதனால் குழந்தை அஷ்ட கோணல்களுடன் ஊனமாகப் பிறந்தது. குழந்தைக்கு அஷ்டாவக்கிரன் (அஷ்டம் - எட்டு) என்ற பெயரே ஏற்பட்டு விட்டது. அஷ்டாவக்கிரன் கல்வியில் சிறந்து விளங்கினான். அவனது புலமை கண்டு தந்தை கஹோளர் மகிழ்ந்தார்.

ஒருமுறை, மிதிலையில் ஜனகமகாராஜா வேதப் போட்டி நடத்தினார். அங்கு வந்தி என்ற புலவர் இருந்தார். அவரை எதிர்த்து ஜெயித்தவர்கள் யாருமில்லை. இப்போது கூட போட்டியின் தன்மை கடுமையாக இருந்தது. அதாவது,தோற்பவர்கள் கடலில் வீசப்படுவார்கள் என்பது நிபந்தனை. அஷ்டாவக்கிரன் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றான். ஊனமுற்றவனும், வயதில் சிறியவனுமான அஷ்டாவக்கிரனை போட்டி நடக்கும் இடத்துக்குள் அனுமதிக்ககாவலர்கள் மறுத்தனர். அஷ்டாவக்கிரன் அவர்களிடம், ஐயா! ஊனமுற்றவர்கள் எதிரே வந்தால், அரசன் கூட ஒதுங்கி வழிவிட வேண்டும் என்பதே சாஸ்திரம், என்றான். இதை அந்தப்பக்கமாக வந்த ஜனகர் கவனித்து விட்டார். அவனை அனுமதிக்கும்படி உத்தரவிட்டார். அஷ்டாவக்கிரனும் போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றான். ஜனகர் அவனிடம்,சிறுவனான உன்னால் பெரும் புலமை மிக்க வந்தியை ஜெயிக்க முடியாது. போட்டியில் தோற்று, கடலில் வீசப்பட்டு மீன்களுக்கு இரையாகி விடாதே! ஊர் திரும்பிவிடு! என புத்திமதி சொன்னார். ஊஹும்! அஷ்டாவக்கிரன் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. அவன் தைரியமாக ஜனகரிடம், வந்தி தோற்றாலும் அவருக்கும் அதே கதி தானே ஏற்படும்! என்று பதிலளித்தான். ஜனகரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. போட்டி துவங்கியது. வந்தி அஷ்டாவக்கிரனை ஏளனமாக பார்த்தார். அவனிடம்கேள்விகளை தொடுத்தார். மணிமணியான பதில்களைச் சொல்லி அசத்தினான் அஷ்டாவக்கிரன். ஆனால், அவன் கேட்ட கேள்விகளுக்கு வந்தியால் பதில் சொல்ல முடியவில்லை. வந்தி தோற்றார். போட்டி நிபந்தனைப்படிகடலில் வீசப்பட்டார். அறிவுக்கு வயதோ, ஊனமோ தடையில்லை என்பதும், படித்தவர்களெல்லாம் அறிவு ஜீவிகள் இல்லை என்பதும் தெரிகிறதல்லவா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar