Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உனக்கெது சொந்தம்! எனக்கெது சொந்தம்!
 
பக்தி கதைகள்
உனக்கெது சொந்தம்! எனக்கெது சொந்தம்!

பிருகதச்வன் என்ற மன்னர், தேவலோக தலைமை பதவி மீது கொண்ட ஆசையால், நுõறு அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார். இதுபற்றி, தன் குருவிடம் ஆலோசனை கேட்டார்.மன்னா! பதவிகள்நிலையற்றவை. தெய்வத்திருவடியை அடைவதேநிலையான பதவி, என்று அறிவுறுத்தினார். இருப்பினும், மன்னருக்கு ஆசை விடவில்லை. 92 யாகம் முடிந்தது. இந்நிலையில் குரு இறந்து போனார். அந்தணர் குலத்தில் வாமதேவர் என்ற பெயரில் அவதரித்தார். ஒன்பது வயதில் அவருக்கு, உபநயனம் (பூணுõல் அணிதல்) நடந்தது. அப்போது பிருகதச்வன் 100வது யாகத்தை ஆரம்பித்திருந்தார். அங்கு சென்ற வாமதேவரிடம், சுவாமி! உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள். தருகிறேன் என்றார் மன்னர்.  மன்னா! உனக்கு உரிமையாக உள்ள அனைத்துமே எனக்குரியதாக ஆகட்டும் என்ற வாமதேவரிடம், இந்த நிமிடம் முதல் என்னுடையதெல்லாம் உங்களுக்கே சொந்தம், என்று சொல்லி சிம்மாசனத்தில் வாமதேவரை அமர வைத்தார்.மன்னா! கொடுக்கும் தானத்தை தட்சிணையோடு கொடு, என்றார் வாமதேவர்.இதோ! என்ற மன்னர் கழுத்தில் இருந்த முத்து மாலையை கழற்ற முயன்றார்.

தடுத்த வாமதேவர், உனக்குரிய அனைத்தும் எனக்கு தந்து விட்ட பிறகு, மாலையும் என்னுடையதே. அதை எப்படி தட்சிணையாக தர முடியும்? என்றார். மன்னர் செய்வதறியாமல் கீழே சரிந்து உறக்கத்தில் ஆழ்ந்தார். அப்போது கனவு வந்தது. அதில் எமதர்மன் முன் மன்னர் நின்றார். புண்ணியம் அதிகமாகவும், பாவம் கொஞ்சமாகவும்செய்திருக்கிறாய். முதலில் எதற்குரிய பலனை அனுபவிக்க விரும்புகிறாய்? என்று கேட்டார்.பாவத்தின் பலனையே முதலில் தாருங்கள், என்றார் மன்னர்.அதன்படி, மன்னர்பாலைவனத்தில் தள்ளப்பட்டார். தகிக்கமுடியாத வெப்பம் தாக்கியது. அப்போது மன்னர்மனதிற்குள், எனக்குரியதை எல்லாம் வாமதேவருக்கு கொடுத்து விட்ட நிலையில், பாவ, புண்ணியம் மட்டும் எப்படி என்னிடம் இருக்கும்? எமன் என்னைத் தண்டிக்க நியாயம் இல்லையே... என்ற எண்ணம் எழுந்தது. அந்த விநாடியே வெப்பம் நீங்கி குளிர்ச்சியானது. பாலை மறந்து அந்த இடம் நந்தவனம் போல மாறியது. தடாகத்தில் தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்கின. அப்போது முன்னாள் குரு அங்கு வந்து, மன்னா! எல்லாம் எனக்கு உரிமையான பின் உனக்கு எது சொந்தமாக இருக்க முடியும்? பாவ, புண்ணியம் இரண்டையும் என்னிடம் அளித்து விட்டதாகஅல்லவா எமதர்மனிடம் சொல்லியிருக்க வேண்டும்... என்று கூறினார். அத்துடன் கனவு கலைந்தது.இதன்பிறகே வாமதேவராக வந்துள்ளது தன் முன்னாள் குருநாதர் என்ற உண்மையை உணர்ந்தார் மன்னர். அவரது கட்டளையை மீறியதால், தனக்கு பாடம் கற்பித்து, நல்வழி காட்ட வந்துள்ளதையும் புரிந்து கொண்டார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar